KL Rahul in relationship: ஒரு ஹார்ட் எமோஜி..! காதலி இவர்தான் என ஊருக்குச் சொன்ன கிரிக்கெட்டர் கே.எல்.ராகுல்!!
கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வெளியான தகவலை அடுத்து, நேற்று ரெட் ஹார்ட், க்ளோப் எமோட்டிகான் என இருவரும் மாறி மாறி அன்பை பரிமாறிக் கொண்ட பதிவு, காதலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் பெரும்பாலான கிரிக்கெட்டர்களுக்கு அடுத்தடுத்து திருமணம் நடைபெற்று வருகிறது. பும்ரா, பாண்டியா என இளம் வீரர்களும் ‘ஃபேமிலி மேனாகி’ வரும் நிலையில், அதிரடி ஓப்பனர் கே.எல் ராகுலும் தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார். இனி அடுத்து என்ன? டும் டும் டும்தான் என நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டுக்கும் கிரிக்கெட்டுக்கும் இருக்கும் பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில், பாலிவுட் நடிகை, மாடல் அதியா ஷெட்டியை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் கே.எல். ராகுல். நவம்பர் 5-ம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய அதியாவுக்கு ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் சிறப்பு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Happy birthday my ❤️ @theathiyashetty pic.twitter.com/CqLUbyLHrK
— K L Rahul (@klrahul11) November 5, 2021
ஏற்கனவே, கே.எல் ராகுலும், அதியா ஷெட்டியும் காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகின. இது அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவுகள் உறுதிப்படுத்தி இருந்தாலும், இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு முதல் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக வெளியான தகவலை அடுத்து, நேற்று ரெட் ஹார்ட், க்ளோப் எமோட்டிகான் என இருவரும் மாறி மாறி அன்பை பரிமாறிக் கொண்ட பதிவு, இவர்களது காதலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை பேட்ஸ்மேன்களில் ஒருவரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ராகுல், ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், நடப்பு உலகக்கோப்பையில் அவரது காதலியின் பிறந்தநாளான நவம்பர் 5-ம் தேதி நடைபெற்ற ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் அரை சதம் கடந்து அசத்தி இருப்பார் ராகுல்! வெறும் 18 பந்துகளில் அரை சதம் கடந்து, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் இரண்டாவது அதிவேக அரை சதம் கடந்த இந்திய கிரிக்கெட்டர் என்ற சாதனையைப் படைத்தார். பிறந்தநாள் கொண்டாடிய அதியா ஷெட்டி, இந்திய அணி ஸ்காட்லாந்தை எதிர்கொண்ட போட்டியை துபாயில் இருந்து நேரில் கண்டு களித்து ராகுலை உற்சாகப்படுத்தி இருக்கிறார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்