Cricket World Cup 2023: கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல்முறை..! உலகக்கோப்பைக்கு அனைத்து அணிகளுக்கும் புது கேப்டன்கள்..!
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அணிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு கேப்டனும் இந்தாண்டு எந்த அணியையும் வழிநடத்தவில்லை.
இந்தாண்டு ஒருநாள் உலகக்கோப்பை தொடரானது இந்தியாவில் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற அக்டோபர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை:
2023ம் ஆண்டுக்காக ஒருநாள் உலகக்கோப்பைக்கான தொடரை சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டது. இந்த தொடருக்கு முன்னதாக ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் ஜூன் 18 முதல் ஜூலை 9 வரை ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கிறது. இந்த தகுதிச்சுற்றில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், அயர்லாந்து (அ) தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் விளையாட இருக்கின்றன. இந்த தகுதிச்சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இந்தியாவில் இந்தாண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும்.
இந்தநிலையில், வருகின்ற உலகக்கோப்பை தொடரில் அனைத்து அணிகளும் புது கேப்டன்களின் கீழ் விளையாட இருக்கின்றன. கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் அணிகளுக்கு தலைமை தாங்கிய ஒரு கேப்டனும் இந்தாண்டு எந்த அணியையும் வழிநடத்தவில்லை. இதுவே ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
For the first time in the history of the men's ODI World Cup, not a single team will have the same captain as the previous edition 🤯 #CWC23 pic.twitter.com/zqvNzdPLcC
— ESPNcricinfo (@ESPNcricinfo) April 9, 2023
கேன் வில்லியம்சன்:
காயத்திற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு பின்பு கேன் வில்லியம்சன் மட்டுமே நியூசிலாந்து கேப்டனாக இருந்தார். அவருக்கு ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகினார். கடந்த 2019 ம் ஆண்டு 9 இன்னிங்ஸில் விளையாடி 578 ரன்கள் எடுத்து சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நியூசிலாந்து இன்னும் மாற்று கேப்டன் பெயரை அறிவிக்கவில்லை என்றாலும், வில்லியம்சன் இல்லாதபோது அணியை வழிநடத்திய டாம் லாதம் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த உலகக்கோப்பையில் அணியை வழிநடத்திய கேப்டன்கள் முதல் தற்போது இருக்கும் கேப்டன்கள் வரை யார் யார் அணியை வழிநடத்துகின்றனர் என்பதை பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை தொடர்ந்து, தற்போது ஆஸ்திரேலிய அணியானது பேட் கம்மின்ஸ் தலைமையில் உள்ளது. அதேபோல், ஓய்வு பெற்ற மஷ்ரஃப் மோர்டாசாவுக்குப் பதிலாக வங்காளதேஷத்திற்கு தமிம் இக்பால் தலைமை தாங்கி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு தலைமை தாங்கி 2019 உலகக்கோப்பை தொடரை வென்று கொடுத்த இயோன் மோர்கன் கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து, தற்போது ஜாஸ் பட்லர் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.
ரோகித் - பாபர் அசாம்:
கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் கேப்டன் பதவிலிருந்து விலகிய விராட் கோலிக்கு பதிலாக, ரோகித் ஷர்மா இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக உள்ளார். அதேபோல், பாகிஸ்தான் அணிக்கு கடந்த உலகக்கோப்பை தொடரில் தலைமை தாங்கிய சர்பராஸ் அகமதுவுக்குப் பதிலாக, கடந்த 2020 ம் ஆண்டு முதல் பாபர் அசாம் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
கடந்த முறை பத்து அணிகள் பங்கேற்கும் முக்கிய போட்டியில் இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இந்த ஆண்டு தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். ஆனால் அங்கும் கேப்டன்கள் மாற்றங்கள் உள்ளன. திமுத் கருணாரத்னேவுக்குப் பதிலாக இலங்கைக்கு தசுன் ஷனகா பொறுப்பேற்றுள்ளார். அதே சமயம் ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரன் தலைமை தாங்கினர். இருப்பினும் இப்போது வெஸ்ட் இண்டீஸ் ஷாய் ஹோப் தலைமையில் உள்ளது.
தென்னாப்பிரிக்கா நிலைமை என்ன?
தென்னாப்பிரிக்காவும் இன்னும் முக்கிய போட்டிக்கு தகுதி பெறவில்லை - வரவிருக்கும் தொடரில் பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, நிகர ரன்-ரேட்டை -0.382 இலிருந்து -0.076 ஆக அல்லது சிறப்பாக மேம்படுத்தினால் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறும்.
அப்படி தகுதிபெற்றால் கடந்த உலகக்கோப்பை தொடரில் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, டெம்பா பவுமா தலைமையில் களமிறங்கும்.