தொடர்ந்து 4-வது முறையாக பார்டர்-கவாஸ்கர் டிராபியை வென்ற இந்தியா... சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் யார் யார்?
பார்டர்-கவாஸ்கர் டிராபியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், அதிகபட்ச ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை காணலாம்.
இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு இந்திய அணி தகுதிபெற்றது. அதேபோல், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் நேற்று டிராவுடன் முடிவுக்கு வந்தது.
இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி மூன்று நாட்களில் போட்டியை முடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்தூரில் நடந்த 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவிடன் மூன்றே நாட்களில் சரணடைந்த இந்திய அணி, அகமதாபாத்தில் 4வது போட்டியில் சந்தித்தது.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் குவித்தது. தொடர்ந்து இந்திய அணி களமிறங்கி 571 ரன்கள் குவித்து 91 ரன்கள் முன்னிலை பெற்றது.
2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 5 வது நாளில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. ஆட்டம் முடிய சுமார் 15 ஓவர்கள் மீதமிருந்தபோது இரு அணி கேப்டன்களும் போட்டியை முடிக்க ஒப்பு கொண்டு டிரா செய்யப்பட்டது. இதையடுத்து, பார்டர்- கவாஸ்கர் டிராபியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இந்தநிலையில், பார்டர்-கவாஸ்கர் டிராபியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், அதிகபட்ச ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலை காணலாம்.
அதிக ரன்கள்:
1. உஸ்மான் கவாஜா - 333 ரன்கள் (7 இன்னிங்ஸ்)
2. விராட் கோலி - 297 ரன்கள் (6 இன்னிங்ஸ்)
3. அக்சர் படேல் - 264 ரன்கள் (5 இன்னிங்ஸ்)
அதிக விக்கெட்கள்:
1. ரவிச்சந்திரன் அஸ்வின் - 25 விக்கெட்கள் (8 இன்னிங்ஸ்)
2. ரவீந்திர ஜடேஜா - 22 விக்கெட்கள் (8 இன்னிங்ஸ்)
3. நாதன் லயன் - 22 விக்கெட்கள் (6 இன்னிங்ஸ்)
தனிநபரின் அதிகபட்ச ஸ்கோர்:
1. விராட் கோலி - 364 பந்துகளில் 186
2. உஸ்மான் கவாஜா - 422 பந்துகளில் 180
3. ஷுப்மான் கில் - 235 பந்துகளில் 128 (12x4, 1x6)
சிறந்த பந்துவீச்சு வீரர்கள் (இன்னிங்ஸ்):
1. நாதன் லயன் - 8/64 (இந்தூர் மைதானம்)
2. ரவீந்திர ஜடேஜா - 7/42 (டெல்லி மைதானம்)
3. டாட் மர்பி - 7/142 (நாக்பூர் மைதானம்)
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகின்ற 17ம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. மார்ச் 22ல் சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.
ஒருநாள் தொடர்:
மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி (மும்பை வான்கடே மைதானம்)
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி (டாக்டர். ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ACA-VDCA கிரிக்கெட் ஸ்டேடியம், விசாகப்பட்டினம்)
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி (எம்ஏ சிதம்பரம் மைதானம் - சென்னை)
அணி விவரம்:
ஆஸ்திரேலிய ஒருநாள் அணி : பாட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், டேவிட் வார்னர் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.
இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி , முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.