மேலும் அறிய
Advertisement
IND vs AUS 1st Test: இவங்கள இறக்குங்க; கோப்பை நமக்கு தான்: ரவி சாஸ்திரி சொன்ன லெவன் யார் யார் தெரியுமா..?
IND vs AUS 1st Test: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டா - கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது.
IND vs AUS 1st Test: இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (பிப்ரவரி, 9) தொடங்கவுள்ளது. இது இரு அணியினர் மத்தியில் பெரும் ஆவலை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது போட்டிக்கான உத்தேச இந்திய அணியை அறிவித்துள்ளார்.
இந்த நேரத்தில் இரு தரப்பினரும் பலமாக இருக்கிறார்கள் மற்றும் இரு அணிகளும் தொடர்ந்து சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டு கொண்டுள்ளனர். முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியுடன் தனது காலத்தில் இரண்டு தொடர்ச்சியான பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இந்திய அணி மீண்டும் இந்த கோப்பையை வெல்ல வேண்டும் என அவர் விரும்புகிறார்.
In his first appearance on The ICC Review, Ravi Shastri has picked India's starting XI for the first #INDvAUS Test 👀
— ICC (@ICC) February 8, 2023
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தைப் பற்றி ஐசிசியிடம் பேசுகையில், ரவி சாஸ்திரி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 11 சிறப்பான வீரர்களை அடையாளம் காட்டியுள்ளார். அவர் கூறியுள்ள 11 வீரர்களுடன் இந்தியா களமிறங்கும் எனவும், அப்படி களமிறங்கும் அணி கோப்பையை வெல்லும் எனவும் அவர் உறுதியாகக் கூறுகிறார். ரோஹித் ஷர்மா ஓப்பனிங் பேட்ஸ் மேனாக களமிறங்குவது உறுதி என்றாலும், அவர் ஷுப்மான் கில் அல்லது கே.எல்.ராகுலுடன் களமிறங்க வேண்டும் என சாஸ்திரி கூறுகிறார்.
புஜாரா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த பேட்டர்களாக களமிறங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ரவி சாஸ்திரி இந்திய அணியில், இஷான் கிஷன் அல்லது கே.எஸ்.பாரத் இருவரில் யாராவது ஒருவர் அணியில் இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார். மேலும், ஆல் ரவுண்டர் வரிசையில், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும், பந்துவீச்சு பிரிவில் குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம்பிடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
ரவி சாஸ்திரியின் உத்தேச அணி
ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல், / சுமன் கில், புஜாரா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்) / கே.எஸ். பரத், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது ஷமி.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
தஞ்சாவூர்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion