Rahul Dravid:நல்ல சம்பளம் கொடுங்கள் நானே நடிக்கிறேன்.. மாஸ் காட்டிய ட்ராவிட்
நல்ல சம்பளம் கொடுத்தால் நானே என் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று ராகுல் ட்ராவிட் கூறியுள்ளார்.
நல்ல சம்பளம் கொடுங்கள்:
மும்பையில் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் தனியார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் உங்கள் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுத்தால் அந்த படத்தில் யாரை நாயகனாக நடிக்க வைக்கலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, "நல்ல சம்பளம் கொடுத்தால் நானே என் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்"என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த நாடு முழுவதும் பயணம் செய்து ரசிகர்களின் அந்த மகிழ்ச்சியையும் ஆர்வத்தையும் அனுபவிக்க விரும்புகிறேன்.
நான் இந்தியா உலக கோப்பையை வெல்லும் போது அணியில் ஒரு வீரராக இருந்தது கிடையாது. ஆனால் ஒரு பயிற்சியாளராக இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றிய போது உடன் இருந்தது மிகுந்த மிகிழ்ச்சியையும் புது அனுபவத்தையும் வழங்கியது"என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு:
முன்னதாக 1983 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த கபில் தேவ் வாழ்க்கை வரலாறு படமாக வெளியாகியுள்ளது. அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறும் டாக்குமெண்டரி படமாக வெளியானது. எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையும் திரைப்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
நேற்று முன் தினம் கூட இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் பயோபிக் திரைப்படமாக உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியான சூழலில் ராகுல் ட்ராவிட்டின் வாழ்க்கையும் திரைப்படமாக உருவகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: Under 17 World Champion:"ஏறு முன்னேறு இது கரையே இல்லா காட்டாறு" வினேஷ் போகத் கிராமத்திலிருந்து மற்றொரு சாம்பியன்!
மேலும் படிக்க: Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்க வைக்கும் வீரர்கள் யார்?