மேலும் அறிய

Rishabh Pant Treatment: சிறப்பு சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்லும் ரிஷப் பண்ட்.. பிசிசிஐ புதிய திட்டம்..!

இங்கிலாந்தில் ரிஷப் பண்டுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் விரைவில் களம் திரும்புவதை உறுதி செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனுமான ரிஷப் பண்ட் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியுடன் இருப்பதையும், ஐபிஎல்-க்கு திரும்புவதையும் உறுதி செய்யும் விதமாக, அவரை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. 

இங்கிலாந்தில் ரிஷப் பண்டுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர் விரைவில் களம் திரும்புவதை உறுதி செய்ய பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. இதையடுத்து, வருகின்ற ஜூன் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்டை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. 

Cricbuzz இன் அறிக்கையின்படி, ரிஷப் பண்டை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் மார்ச் இறுதியில் தொடங்கும் ஐபிஎல் 17வது சீசனில் இருந்து ரிஷப் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப முடியும். ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு வாரியம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. இதனால் நீண்ட நாட்களாக கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த ரிஷப் பண்ட், தனது முழு உடற்தகுதியுடன் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார். 

முன்னதாக, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை இங்கிலாந்துக்கு அனுப்ப பிசிசிஐ முடிவு செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து சூர்யகுமார் யாதவ் மற்றும் முகமது ஷமி காயத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 17ம் தேதி சூர்யகுமார் யாதவுக்கு ஜெர்மனியில் விளையாட்டு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமான செய்யப்பட்டது. 

கடந்த 2022 டிசம்பரில் ஹரித்வாருக்கு செல்லும்போது ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளானார். அதன்பிறகு, அப்போது புத்தாண்டை கொண்டாடுவதற்காக டெல்லியில் இருந்து லாலாகியில் உள்ள தனது வீட்டிற்கு பந்த் சென்று கொண்டிருந்தார். ஆனால் வழியில் அவரது கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பண்ட் படுகாயமடைந்தார். ரிஷப் சுமார் ஒன்றரை மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்தால் ரிஷப் கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருந்தார். இருப்பினும், கடந்த சில மாதங்களில் அவரது உடற்தகுதி கணிசமாக மேம்பட்டுள்ளது. தற்போது, ​​பண்ட் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சி செய்து வருகிறார். 

காயம் காரணமாக, ஏசிசி ஏற்பாடு செய்த ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையில் பண்ட் அணியில் இடம்பெற முடியவில்லை. இருப்பினும், தற்போது பண்ட் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி திரும்புவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இது குறித்து டெல்லி கேபிடல்ஸ் இயக்குனர் சவுரவ் கங்குலி கூறுகையில், ”பண்ட் இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் இன்னும் பயிற்சியைத் தொடங்கவில்லை. விரைவில் அவர் பூரண குணமடைந்துவிடுவார் என நம்புகிறேன். அதே நேரத்தில், இந்த முறை ரிஷப் பண்ட் மட்டுமே அணியை வழிநடத்துவார் என்று அணி நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது” என்றார். 

View this post on Instagram
 
A post shared by sunnysingh ੴ (@mesunnysingh)

சமீபத்தில், ரிஷப் பண்டின் சகோதரி சாக்ஷியின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி தொடர்பான சில படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Chennai Rain Alert: நவ.29, 30-ல் சென்னைக்கு மிக கனமழை; சென்னை அருகே கடக்கும் புயல்- வானிலை அப்டேட் இதோ!
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Fengal Cyclone LIVE: சென்னையை நெருங்கும் ஃபெங்கல் புயல்! காத்திருக்கும் கனமழை!
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
ஃபெங்கல் புயல்; கடலாக மாறிய உப்பளம்... 'இதான் சார் எங்க வாழ்க்க' புலம்பும் தொழிலாளர்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Embed widget