BCCI : தேர்வுக்குழுவில் காலியிடத்தை அறிவித்த பிசிசிஐ.. யார் யார் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ!
தற்போதைய தேர்வுக்குழுவை பொறுத்தவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் சிவசுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் இடம் பெற்றுள்ளன
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடவர் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கான காலியிடத்தை அறிவித்துள்ளது. எனவே இந்தப் பதவிக்கு யார், எப்படி விண்ணப்பிக்கலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்கள் தேர்வுக் குழு உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வுக் குழுவில் ஒரு ப்தவிக்கு மட்டுமே விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பப் படிவத் தகவளை பிசிசிஐ தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போதைய தேர்வுக் குழுவில் உள்ள எந்த உறுப்பினர் விலக இருக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.
தற்போதைய தேர்வுக்குழுவை பொறுத்தவரை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழுவில் சிவசுந்தர் தாஸ், சுப்ரோடோ பானர்ஜி, சலில் அன்கோலா மற்றும் ஸ்ரீதரன் ஷரத் ஆகியோர் இடம் பெற்றுள்ளன. ஊடக செய்திகளின்படி, சலில் அன்கோலா தேர்வுக் குழுவில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக யார் தேர்வுக்குழுவில் இடம் பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
தேர்வுக் குழுவில் பதவியை பற்றி குறிப்பிடுகையில், விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜனவரி 25ம் தேதி ஆகும். இந்த விண்ணப்பப் பதிவு பிசிசிஐ இணையதளத்தில் சமர்பிக்கலாம். அதன்பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட தேர்காணலுக்கு (இண்டர்வியூ) அழைக்கப்படுவார்கள்.
தேர்வுக்குழு பதவிக்கான தகுதி என்ன..?
- விண்ணப்பிக்கும் நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த தேர்வுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கக்கூடாது.
- விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 7 டெஸ்ட் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ODIகள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி:
இந்த நாட்களில் இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்ற நிலையில், அதில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இப்போது தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஜனவரி 17 புதன்கிழமை பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு இது கடைசி டி20 தொடர். இதன் பிறகு இந்திய வீரர்கள் ஐபிஎல் மட்டும் விளையாடுவார்கள்.