BBL 2023: ஐந்தாவது முறையாக உயர்த்தப்பட்ட கோப்பை.. பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி அசத்திய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ்..!
ஆட்டநாயகன் விருது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் வழங்கப்பட்டது.
இந்தியாவில் எப்படி ஐபிஎல் தொடரானது மிகவும் பிரபலமானதோ, அதேபோல் ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் தொடரனாது மிகவும் பிரபலம். இந்தநிலையில், இந்த தொடரின் 12வது சீசனாது டிசம்பர் 13ம் தேதி தொடங்கி இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. லீக் மற்றும் எலிமினேட்டர் சுற்றுகளின் அடிப்படையில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேருக்குநேர் மோதின.
முதலில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில், இந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜோஷ் பிரௌன் மற்றும் சாம் ஹீஸ்லெட் களமிறங்கினர். 12 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் அடித்து 25 ரன்கள் குவித்த ஜோஷ் பிரௌன், பெயின் பந்துவீச்சில் டையிடம் கேட்சானார். தொடர்ந்து, சாம் ஹீஸ்லெட் உடன் இணைந்த நாதன் மெக்ஸ்வீனியும் அதிரடியை வெளிபடுத்த ரிஸ்பேன் ஹீட் அணி ஸ்கோர் உயர தொடங்கியது. அதிரடியாக விளையாடிய சாம் ஹீஸ்லெட் 34 ரன்களும், நாதன் மெக்ஸ்வீனி 41 ரன்களும் எடுத்து வெளியேறினர்.பின்னால் வந்த வீரர்கள் லைட்டாக சொதப்ப, ரிஸ்பேன் ஹீட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. பெர்த் அணி சார்பில் பெஹண்ட்ராப், கெல்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர்.
FIVE. TIME. CHAMPIONS. 🎉🏆🔥 #MADETOUGH #BBL12 #FireUpTheFurnace pic.twitter.com/uxRLZnUjBH
— Perth Scorchers (@ScorchersBBL) February 4, 2023
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்களான பான்கிராஃப்ட் 15 ரன்களும், ஸ்டீஃபன் 21 ரன்களும் எடுத்து வெளியேறினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 17 ரன்களும் மற்றும் ஜோஷ் இங்லிஸ் 26 ரன்களும் எடுத்து தங்களது பங்களிப்பை தர, 5வது வரிசையில் இறங்கிய கேப்டன் அஷ்டான் டர்னர் அதிரடியாக விளையாடி 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.
WE ARE #BBL12 CHAMPIONS!!! 🏆 A stunning fight back to clinch our FIFTH Title! 🔥 #MADETOUGH #FireUpTheFurnace pic.twitter.com/MDUEy3Cn0b
— Perth Scorchers (@ScorchersBBL) February 4, 2023
தொடர்ந்து களமிறங்கிய கூப்பர் 11 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்கள் அடிக்க, நிக் ஹாப்சன் 7 பந்துகளில் 18 ரன்களை திரட்டினார். இதன்மூலம், கடைசி ஓவரின் 2 வது பந்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 178 ரன்களை துரத்தி பிபிஎல் தொடரில் 5வது முறையாக கோப்பை வென்றது.
ஆட்டநாயகன் விருது பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் கேப்டன் ஆஷ்டன் டர்னருக்கும், தொடர் நாயகன் விருது மேத்யூ ஷார்ட்டுக்கும் வழங்கப்பட்டது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் பிபிஎல் லீக் தொடரில் வென்ற ஐந்தாவது பட்டம் இதுவாகும். கடந்த ஆண்டும் இவர்களே கோப்பையை வென்று அசத்தி, நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கினர். தொடர்ந்தும் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:
ஸ்டீஃபன் எஸ்கினாஸி, கேமரூன் பான்கிராஃப்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், மேத்யூ கெல்லி.
பிரிஸ்பேன் ஹீட் அணி:
சாம் ஹீஸ்லெட், ஜோஷ் பிரௌன், நேதன் மெக்ஸ்வீனி, சாம் ஹைன், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மேக்ஸ் பிரயண்ட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ குன்னெமேன்.