INDvsBAN : எபாதத் ஹொசைன் விலகல்; ஷகிப் அல் ஹசன் ஆடுவாரா..? வங்காளதேச அணிக்கு கடும் நெருக்கடி...!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்கள் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், வங்காளதேச அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை இந்திய கிரிக்கெட் அணி இழந்த நிலையில், டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி எளிதாக வென்ற நிலையில், டாக்காவில் இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 22-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிராக களமிறங்கும் வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக தொடர்ந்து பந்துவீசாத, அந்த அணியின் முக்கிய பந்துவீச்சாளர் எபாதத் ஹொசைனுக்கும் இடம் வழங்கப்படவில்லை. காயம் காரணமாக அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
The Bangladesh Cricket Board (BCB) announces the squad for the second Test (22-26 December 2022) against India at the Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur.#BCB | #Cricket | #BANvIND pic.twitter.com/yaN9sVRGq3
— Bangladesh Cricket (@BCBtigers) December 18, 2022
மேலும், 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் நசும் அகமதுவிற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசனுக்கு இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின்போதே கையில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வங்காளதேச அணியின் முக்கிய பலமாக திகழும் ஷகிப் அல்ஹசன் சிறந்த ஆல் ரவுண்டர். அவர் வங்காளதேச அணிக்காக கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் 12 ஓவர்கள் மட்டுமே வீசினார். அவர் இரண்டாவது இன்னிங்சில் ஒரு ஓவர் கூட வீசவில்லை. இதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷகிப் அல் ஹசன் களமிறங்குவாரா? என்று கேள்வி எழுந்துள்ளது. அதன் காரணமாகவே, ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக நசும் அகமது வங்காளதேசத்தின் 15 பேர் கொண்ட அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
வங்காளதேச அணியின் முக்கிய வீரரான எபாதத் ஹொசைன் விலகியுள்ள நிலையில், ஷகில் அல் ஹசனும் ஆடாத சூழல் ஏற்பட்டுள்ளதால் வங்காளதேச அணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அதேபோல, வங்காளதேசத்தின் முன்னாள் கேப்டன் மோமினுல் ஹக் தன்னுடைய இடத்தை தக்கவைத்துள்ளார். அவர் டெஸ்ட கிரிக்கெட்டில் அடித்துள்ள 11 சதங்களில் 10 சதங்கள் டாக்கா மைதானத்தில் அடிக்கப்பட்டவை. சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர் கடந்த போட்டியில் களமிறக்கப்படவில்லை. அடுத்த போட்டியில் அவர் களமிறக்கப்படுவாரா? என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள வங்காளதேச அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு: ஷொசைன் ஷாண்டோ, மோமினுல் ஹக், யசீர் அலி சவுத்ரி, முஷ்பிஹிர் ரஹீம், ஷகிப் அல் ஹசன், ஜாகீர் ஹாசன், லிட்டன்தாஸ், நூருல்ஹாசன், மெஹிதி ஹாசன், தைஜூல் இஸ்லாம், டஸ்கின் அகமது, சையத் கலீல் அகமது, நசும் அகமது, ஹாசன்ஜோய், ரஹ்மான்ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.