AUS-W vs SA-W Final: மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 6வது முறையாக ஆஸ்திரேலியஅணி சாம்பியன்
AUS W vs SA W T20 World Cup Final LIVE: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. அதுகுறித்த தகவல்களை நாம் காணலாம்.
LIVE
Background
மகளிர் டி-20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்க அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. தென்னப்ரிக்காவில் உள்ள நியூலேண்ட் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்திலும், ரசிகர்கள் நேரலையில் காணலாம்.
ஆஸ்திரேலியா - தென்னாப்ரிக்கா அணிகள் மோதல்:
லீக் சுற்று முடிவில் பி பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள், முதல் அரையிறுதிப்போட்டியில் மோதின, இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா அணி, இந்தியாவை வீழ்த்தி ஏழாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதி போட்டியில், ஏ பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்த தென்னாப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்ற தென்னாப்ரிக்க அணி, இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோத உள்ளது. 6வது முறையாக கோப்பையை வெல்ல நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவும், முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தென்னாப்ரிக்காவும் களமிறங்க உள்ளதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை மிகவும் வலுவாக உள்ளது. அலிசா ஹீலி , பெத் மூனி , மெக் லானிங் , கார்ண்டர் மற்றும் எலிஸ் பெர்ரி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஷப்னிம் இஸ்மாயில் , அயபோங்கா காக்கா , மரிசான் கப் மற்றும் நோன்குலுலேகோ மலாபா ஆகியோர் தென்னாப்ரிக்க அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். இந்த தொடரில் இதுவரை முதல் 10 ரன்கள் எடுத்தவர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மூன்று பேரும் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இரண்டு பேரும் இடம்பெற்றுள்ளனர். தலா இரண்டு பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுத்த முதல் 10 பேரின் பட்டியலில் உள்ளனர் . இதனால் இரு அணிகளும் சமபலத்தில் உள்ளன. அதோடு, உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு தென்னாப்ரிக்க அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. அதேநேரம், இந்த இரு அணிகளும் இதுவரை ஆறு முறை டி- போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அந்த போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த 6 போட்டிகளுமே உலகக்கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்ரிக்க உத்தேச அணி:
டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட், மரிசான் கேப், சுனே லூஸ் (கேப்டன்), சோலி ட்ரையோன், அன்னேக் போஷ், நாடின் டி க்ளெர்க், சினாலோ ஜாஃப்டா , ஷப்னிம் இஸ்மாயில், அயபோங்கா காக்கா, நோன்குலுலேகோ ம்லபா
ஆஸ்திரேலியா உத்தேச அணி:
அலிசா ஹீலி, பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், எலிஸ் பெர்ரி, தஹ்லியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேக்ன் ஷட், டார்சி பிரவுன்
19 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாம்பியன்
தென்னாப்பரிக்க அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன்
மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், 6வது முறையாக ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
AUS-W vs SA-W Final: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா - வெற்றியின் விளிம்பில் ஆஸ்திரேலியா
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் - 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது
AUS-W vs SA-W Final: தென்னாப்பிரிக்கா அணியின் சோலே டிரையான் அவுட் - ரசிகர்கள் சோகம்
தென்னாப்பிரிக்கா அணி வீராங்கனை சோலே டிரையான் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை ஜோனாசென் கைப்பற்றினார்
AUS-W vs SA-W Final: லாரா வோல்வார்ட் விக்கெட்டை இழந்தது தென்னாப்பிரிக்கா - மகிழ்ச்சியில் ஆஸி., அணியினர்
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை விளாசி தள்ளி 61 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்