Asia Cup, Ind vs Pak: பாபர் அசாமைவிட ரோகித் சர்மா இதில் வல்லவர்.. போட்டு உடைத்த முன்னாள் பாக். கேப்டன்..
கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகியோர் தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் யுனிஸ் கான் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஹாங்காங் அணி இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் யுனிஸ் கான் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டெலிகிராஃப் தளத்திற்கு கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “ரோகித் சர்மா மற்றும் பாபர் அசாம் ஆகிய இருவரும் தங்களுடைய அணிக்கு மிகவும் முக்கியமான வீரர்கள். இவர்கள் இருவரும் ரன்களை சேர்ப்பதில் திறமை வாய்ந்தவர்கள்.
#TeamIndia train, our cameras go click-click 📸 📸#AsiaCup2022 | #AsiaCup pic.twitter.com/WLGjcSFv4N
— BCCI (@BCCI) August 26, 2022
ஆனால் கேப்டன் பொறுப்பு என்று வரும்போது பாபர் அசாமைவிட ரோகித் சர்மா சற்று அதிக திறன் படைத்தவர். ஏன்னெறால் அவர் இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார். அத்துடன் அவர் பல்வேறு அனுபவம் மிக்க கேப்டன்களுடன் விளையாடியுள்ளார். எனவே அவருக்கு கேப்டன் பொறுப்பு தொடர்பான சரியான புரிதல் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பயிற்சிக்கு செல்லும் போது அவருடன் பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அஃப்ரிதி பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் காயம் அடைந்துள்ள ஷாஹின் அஃப்ரிதியிடன் கோலி நலம் விசாரிக்கிறார். அதைத் தொடர்ந்து கோலி மீண்டும் ஃபார்மிற்கு திரும்ப ஷாஹின் அஃப்ரிதி தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. ஷாஹின் அஃப்ரிதி காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார். எனினும் அவர் பாகிஸ்தான் அணியுடன் அங்கு பயணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The suspense is over! Let's listen to the conversation between @iShaheenAfridi and @imVkohli 🔊#AsiaCup2022 pic.twitter.com/ttVYLrNtuO
— Pakistan Cricket (@TheRealPCB) August 26, 2022
15 ஆசியக் கோப்பைக்கான தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியுடன் ஆப்கானிஸ்தான் அணி மோதவுள்ளன. உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகிஸ்தான் - இந்திய அணிகளின் அனல் பறக்கும் மோதல் 28ம் தேதி மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கவுள்ள இந்த தொடரானது ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளது. குரூப் போட்டிகளின் முடிவில் இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடும்.
சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும். இம்முறை ஆசிய கோப்பை போட்டிகள் அனைத்தும் டி20 போட்டிகளாக நடைபெற உள்ளன. இதன்காரணமாக இம்முறை ஆசிய கோப்பை தொடருக்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.