Asia Cup : ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை அதிக முறை... இந்தியாவின் சாதனை இதுதான்! மோசமான சாதனையும் இருக்கு!
ஆசிய கோப்பையில் இதுவரை பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்த ஆசிய கோப்பையில் இதுவரை பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் இந்திய அணிதான் அதிக முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்தியா 7 முறையும், இலங்கை ஐந்து முறையும், பாகிஸ்தான் இரண்டு முறையும் வென்றுள்ளது.
ஆசியக் கோப்பை வரலாற்றில் வீரர்களின் சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சு என்று இரண்டு பிரிவுகளிலும் இலங்கை அணியே அதிக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதிலும், முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் இடம்பெறவில்லை. இர்பான் பதான் 22 விக்கெட்டுகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா (19 விக்கெட்) 9வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (17 விக்கெட்) 13வது இடத்திலும் உள்ளனர். இருப்பினும், முதல் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரும், ரோகித் சர்மாவும் உள்ளனர். விராட் கோலி 766 ரன்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளார்.
1984 முதல் 2018 வரையிலான ஆசியக் கோப்பையில் அதிக விக்கெட்கள் எடுத்த டாப் 5 பெளலர்கள் :
- முத்தையா முரளிதரன் (இலங்கை) - 30 விக்கெட்டுகள்
- லசித் மலிங்கா (இலங்கை) - 29 விக்கெட்டுகள்
- அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) - 26 விக்கெட்
- சயீத் அஜ்மல் (பாகிஸ்தான்) - 25 விக்கெட்
- சமிந்த வாஸ் (இலங்கை) - 23 விக்கெட்
1984 முதல் 2018 வரையிலான ஆசியக் கோப்பையில் அதிக ரன் அடித்த டாப் 5 பேட்ஸ்மேன் :
- சனத் ஜெயசூர்யா (இலங்கை) – 1220
- குமார் சங்கக்கார (இலங்கை) – 1075
- சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 971
- சோயிப் மாலிக் (பாகிஸ்தான்) - 907
- ரோஹித் சர்மா (இந்தியா) - 883
இதுவரை இந்த போட்டியானது 14 முறை நடைபெற்று அதில் 13 முறை ஒருநாள் தொடராக நடத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு 2016 முதல் இந்த தொடர் டி20 தொடர்களாக நடத்தப்பட்டு வருகிறது.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி :
🚨#TeamIndia squad for Asia Cup 2022 - Rohit Sharma (Capt ), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, R Jadeja, R Ashwin, Y Chahal, R Bishnoi, Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Avesh Khan.
— BCCI (@BCCI) August 8, 2022
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஆர் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர் ஜடேஜா, ஆர் அஷ்வின், ஒய் சாஹல், ஆர் பிஷ்னோய், புவனேஷ்வர் குமார் , அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்