மேலும் அறிய

IND vs PAK Asia Cup: ஆசிய கோப்பையில் இதுவரை இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றிய விபரங்கள்..

IND vs PAK Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதிய போட்டி முடிவுகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

IND vs PAK Asia Cup: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஆசிய கோப்பைக்கு தகுதி பெறும் மற்றொரு அணியும் இணைந்து ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி பெறும் ஒரு அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதம் 27ம் ம் தேதி தொடங்கவுள்ள இந்தப் போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 

மேற்கண்ட அனைத்து 5 நாடுகளும் ஏற்கனவே ஆசிய கோப்பையில் தகுதி பெற்றதால், ஏ பிரிவில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு 4 நாடுகள் போட்டியிட இருக்கின்றனர்.

இந்த நிலையில், ஆசிய கோப்பை 2022 தகுதிச் சுற்றுப் போட்டிகளை நடத்த ஓமன் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தகுதிச்சுற்று வருகிற ஆகஸ்ட் 20 முதல் தொடங்கி 5 நாள் நடைபெற இருக்கிறது. 

ஆசிய கோப்பையோ, உலக கோப்பையோ அல்லது வேறு எந்த போட்டித் தொடரோ இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன எனறால், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனி குஷி ஏற்பட்டு விடும். சீட்டின் நுனிக்கே ரசிகர்கள் வந்து பார்க்கும் அளவிற்கு போட்டி மிகவும் சீரியஸாக இருக்கும். அதுவும் குறிப்பாக டீவியில் பார்ப்பவர்களுக்கு ரிமோட்டை அல்லது டீவியை உடைக்கும் அளவிற்கு பரபரப்பை உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும்படியாக இருக்கும். இந்நிலையில் வரும், 27ம் தேதி ஆசிய கோப்பை தொடங்கவுள்ள நிலையில், 28ம் தேதி  ஞாயிற்றுக்கிழமை கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா பாகிஸ்தான் போட்டி மாலை 7.30 மணிக்கு நடக்கவுள்ளது. இந்நிலையில், இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஆசிய கோப்பையில் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.இதில் 1997ஆம் ஆண்டு நடந்த போட்டி மட்டும் மழை காரணமாக முழுவதும் தடைபட்டது. மீதமுள்ள 13 போட்டிகளின் முடிவுகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

1984 Asia Cup: 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
1988 Asia Cup: 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
1995 Asia Cup: 97 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை இமாலய இலக்கு வித்தியாசத்தில் வென்றது. 
2000 Asia Cup: 44 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது. 
2004 Asia Cup: 59 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றது .
2008 Asia Cup: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
2010 Asia Cup: 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
2012 Asia Cup: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
2014 Asia Cup: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் த்ரில் வெற்றியை பெற்றது. 
2016 Asia Cup: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது. 
2018 Asia Cup: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பாகிஸ்தானை வென்றது.

நடைபெற்ற 13 போட்டிகளில் இந்தியா 8 போட்டிகளில் வென்றுள்ளது. பாகிஸ்தான் அணி 5 முறையும் வென்றுள்ளது. ஏற்கனவே 2021 டி20 உலககோப்பை போட்டியில் இந்தியாவை பாகிஸ்தான் வென்று தனது பலத்தினை காட்டியுள்ள நிலையில், இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும் முனைப்பில் மும்மரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
School Holiday: தொடரும் கனமழை - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளிக்கு இன்றும் விடுமுறை!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
காதலித்த பெண்ணை கரம் பிடித்த கையோடு காவல் நிலையம் சென்ற தம்பதி! கணவனை தூக்கிய போலீஸ்! புதுப்பொண்ணு ஷாக்!
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மீனத்துக்கு பாசம்..மேஷத்துக்கு நம்பிக்கை: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கை, கால் செயலிழந்த நடிகர் வெங்கல் ராவ்விற்கு KPY பாலா செய்த செம உதவி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்!
கேரளா, ஆந்திராவில் இருக்கு; தமிழ்நாட்டுக்கு என்ன? தமிழக அரசு தலைகுனிய வேண்டும்: ஹரி நாடார்
கேரளா, ஆந்திராவில் இருக்கு; தமிழ்நாட்டுக்கு என்ன? தமிழக அரசு தலைகுனிய வேண்டும்: ஹரி நாடார்
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!
விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மனுக்கு சிக்கல்! கவுன்சிலர்கள் கும்பலாக எடுத்த அதிரடி முடிவு!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Sam Pitroda:இந்தியர் குறித்து சர்ச்சையான கருத்து: ராஜினாமா செய்த காங்கிரஸ் அயலக தலைவர் சாம் மீண்டும் நியமனம்!
Embed widget