மேலும் அறிய

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன்

தமிழக கிரிக்கெட் சங்கத்தில் மீண்டும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் கைதான் ஓங்கி இருக்கிறது. அவரது அணியைச் சேர்ந்தவர்தான் மீண்டும் தலைவராகப் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் பழம்பெரும் சங்கங்களில் ஒன்றான தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, அமைச்சர் பொன்முடியின் மகன், அசோக் சிகாமணி  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இன்று தேர்தல் நடைபெற இருந்த சூழலில், ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் போது, எதிர்த்துப் போட்டியிட்ட பிரபு, தமது வேட்புமனுவை வாபஸ் பெற்றதால், TNCA- எனப்படும் தமிழ்நாடு கிரிக்கெட்  சங்கத்தின் புதிய தலைவராக டாக்டர் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன்

TNCA வரலாறு:

இந்தியாவின் பழம்பெரும் கிரிக்கெட் சங்கங்களில் ஒன்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். கடந்த 1932-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இச்சங்கத்தின் "ஹோம் கிரவுண்ட்" என்பது சேப்பாக்கம் மைதானம் என செல்லமாக அழைக்கப்படும் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியம். பல வரலாற்று மைல்கற்களைக் கொண்ட தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தற்போது 90-வது ஆண்டில் இயங்கி வருகிறது. இந்தியாவின் பண பலம் படைத்த கிரிக்கெட் சங்கங்களில், TNCA-வும் ஒன்று என்றால் மிகையில்லை.

சர்ச்சைக்குரிய தேர்தல் :

பணமும் பெருமையும் மிக்க TNCA-வின் தலைவர் உள்ளிட்ட சில பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது.  தலைவர் பதவிக்கு விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராகவும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவராகவும் இருக்கும் அசோக் சிகாமணியும், அவரை எதிர்த்து பிரபுவும் போட்டியிட்டனர். இதில் அசோக் சிகாமணி, முன்னாள் தலைவரும் பலம் வாய்ந்த நிர்வாகியாகவும் அறியப்பட்ட இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசனின் அணியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விதிகளை மீறி அசோக் சிகாமணி உள்ளிட்ட சிலர் போட்டியிடுவதால், இத் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டதால், இது சர்ச்சைக்குரிய தேர்தலாக மாறியது. இந் நிலையில், தமது வேட்புமனுவை பிரபு வாபஸ் பெற்றதால், போட்டியின்றி தலைவராகத் தேர்வானார் டாக்டர் அசோக் சிகாமணி.


தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவரானார் அமைச்சர் பொன்முடியின் மகன்

சீனிவாசனும் TNCA-வும்:

கடந்த 20 ஆண்டுகளாக TNCA-வின் சக்தி வாய்ந்த மனிதர் யார் என்றால், கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் என சொல்லிவிடுவர். அந்த அளவுக்கு TNCA-வின் தலைவராக 2002-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை  அசைக்கமுடியாத சக்தியாக இருந்தார். அதன்பின், பல்வேறு சர்ச்சைகள் அவரைச் சுற்றி தொடர்ந்தாலும், நேரடி பதவியில் அவர் இல்லாவிட்டாலும், அவர் கைகாட்டும் நபர்தான், தலைவராக இருந்து வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதியில் ராஜினாமா செய்த TNCA தலைவர் யார் என்றால், அவரது சொந்தமகளான ரூபா குருநாத் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே, அந்த அளவுக்கு செல்வாக்கு மிகுந்த சீனிவாசனின் ஆதரவுடன் தான்,  அமைச்சர் பொன்முடியின் மகனும் கிரிக்கெட் நிர்வாகியுமான அசோச் சிகாமணி, தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு,  தற்போது போட்டியின்றி தேர்வும் ஆகியுள்ளார்.

வெற்றி பெற்ற அமைச்சரின் இளைய மகன்:

இன்று நடைபெற இருந்த தேர்தலில், TNCA-வில் உறுப்பினராக உள்ள 170-க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிப் பெற்று இருந்தனர்.  ஆனால், காலையில் ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் போதே, தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட பிரபு, தமது மனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து, இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன் ஆதரவுடன் போட்டியிட்ட டாக்டர் அசோக் சிகாமணி, போட்டியின்றி, தமிழக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இதை அடுத்து, அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.   உதவி செயலாளர் மற்றும் இணை செயலாளர் பதவிகளுக்குப் போட்டியிட்டவர்களும் தங்களது வேட்புமனுவை, எந்தவொரு நிபந்தனையுமின்றி வாபஸ் பெற்றனர். இதையடுத்து, அனைவரும் போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர். துணைத் தலைவராக ஆடம் சேட், செயலாளராக ஆர்.ஐ. பழனி, இணை செயலாளராக கே. சிவக்குமார், உதவி செயலாளராக ஆர்.என். பாபா மற்றும் பொருளாளராக டி.ஜே. சீனிவாசராஜூம் தேர்வு செய்யப்பட்டனர். 

வழக்குகள் வாபஸ்: 

ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தின் போது, போட்டி வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றது மட்டுமின்றி, நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளை எந்தவித நிபுந்தனையுமின்றி வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட  வழக்குகள் வாபஸ் பெறப்படுவது உறுதியாகிவிட்டது.  இதனால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டநிர்வாகிகள் அனைவரும் உடனடியாக பதவியேற்று, களத்தில் இறங்கினர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர் பொன்முடியின் இளைய மகன் டாக்டர் அசோக் சிகாமணி தலைமையிலான புதிய அணி, சாதனைகள் படைத்து, தமிழக கிரிக்கெட்டிற்கு மென்மேலும் சிறப்புகளைச் சேர்க்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர், 

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Hyundai SUV: அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
அப்க்ரேடட் க்ரேட்டா, பாலிசேட், EV, ஹைப்ரிட் - புதுசா 6 எஸ்யுவிக்களை இறக்கும் ஹுண்டாய் - முழு விவரம்
Online Property Registration : பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
பத்திர பதிவிற்கு இன்று முதல் நேரில் வர வேண்டாம்.! புது ரூல்ஸ்- என்னென்ன ஆவணங்கள் தேவை.? லிஸ்ட் இதோ..
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
சூப்பர் ப்ளான்.. காலியாக இருக்கும் கோயில் நிலங்கள்.. வருவாயை அதிகரிக்க தவெக அரசு போட்ட ஸ்கெட்ச்!
Embed widget