IND vs SA Final T20 2024: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி.. சீரியஸாக ஆட்டத்தை பார்த்த சித்தராமையா!
தனது பரபரப்பான அரசாங்கப் பணிகளுக்கு மத்தியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் இறுதிப் போட்டியை பார்த்துள்ளார்.
தனது பரபரப்பான அரசாங்கப் பணிகளுக்கு மத்தியில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்தியா தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடும் இறுதிப் போட்டியை பார்த்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை:
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் உள்ள பார்படாஸில் நடைபெறும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதனிடையே விராட் கோலி மற்றும் அக்சார் படேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதன்படி விராட் கோலி 76 ரன்களும் அக்சார் படேல் 47 ரன்களும் எடுத்தனர். இவ்வாறாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.
சீரியஸாக ஆட்டத்தை பார்த்த சித்தராமையா:
இந்நிலையில் தான் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்றைய இறுதிப் போட்டியை வீடியோவில் நேரலையாக பார்த்துள்ளார். அதாவது தனது பரபரப்பான அரசாங்கப் பணிகளுக்கு மத்தியில் இந்தியா தென்னாப்பிரிக்க போட்டிகளை பார்த்து ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.