Afghanistan Semi Final Chances: இன்னும் இது மட்டும் வேணும்.. இது நடந்தா ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குள்..!
2023 உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து போன்ற முன்னாள் சாம்பியன் அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.
Afghanistan Chances For World Cup 2023 Semi Final: 2023 உலகக் கோப்பை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 38 போட்டிகள் இதுவரை முடிந்தநிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இப்போது மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகள் போட்டியிட்டாலும், இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியும் மெல்ல மெல்ல முயற்சித்து வருகிறது.
2023 உலகக் கோப்பையில் இதுவரை பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து போன்ற முன்னாள் சாம்பியன் அணிகளை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இன்று ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் 10 புள்ளிகள் கிடைக்கும். இதன் பிறகு தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறலாம்.
ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியின் 39வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது, இதில் ஆப்கானிஸ்தானின் வெற்றி நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அடுத்த மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இன்று ஆஸ்திரேலியாவையும் அதன் பின்னர் தென்னாபிரிக்காவையும் வீழ்த்தி 12 புள்ளிகளை பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி, அதன் பின்னரே எவ்வித இடையூறும் இன்றி நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் நான்காவது இடத்திற்கு முன்னேறும். தற்போது ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இன்றைய தோல்விக்கு பிறகு ஆஸ்திரேலியா 10 புள்ளிகளுடன் அப்படியே இருக்கும். இந்தநிலையில், ஆப்கானிஸ்தான் அணியும் 10 புள்ளிகளை பெற்றிருக்கும். ஆப்கானிஸ்தானின் நிகர ரன் ரேட்டானது ஆஸ்திரேலியாவை விட சிறப்பாக இருந்தால், வெற்றிக்குப் பிறகு அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு வரலாம்.
If Afghanistan manage to bowl out Australia for 171 or less runs, they will overtake Pakistan on NRR as well and points table.
— VINEETH𓃵🦖 (@sololoveee) November 7, 2023
And Its Like Happening 🔥#AUSvsAFG
pic.twitter.com/a3b0jyjNlI
இதற்குப் பிறகு, ஆஸ்திரேலியா, வங்கதேச அணியுடன் விளையாடும் அடுத்த போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா தோற்றால், கங்காரு அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவது கடினம். ஏனெனில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 8 புள்ளிகள் பெற்றுள்ளதால் இரு அணிகளுக்கும் 1 போட்டி மீதமுள்ளது. இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து தோற்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்த இரண்டு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பது சுவாரஸ்யமாக உள்ளது.