Chess Olympiad 2022: செஸ் கரை வேட்டி, துண்டு: கெத்தாக சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க சென்னை வந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளன. இதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்துள்ளர்.
செஸ் ஒலிம்பியாட்: சதுரங்க கரை கொண்ட வேட்டி சட்டையில் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடிhttps://t.co/wupaoCQKa2 | #ChessOlympiad #ChessChennai2022 #ChessOlympiad2022 #NarendraModi pic.twitter.com/KpJeLnY6on
— ABP Nadu (@abpnadu) July 28, 2022
இவர் செஸ் கரை வேட்டி மற்றும் துண்டு அணிந்து சென்னை வந்துள்ளார். அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்.எஸ் அடையாறு தளத்திற்கு சென்றுள்ளார். சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்ல உள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மேலும் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ஒடிசி, கேரளாவின் கதகளி மற்றும் மோகினி ஆட்டம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தார். கமல்ஹாசன் பின்னனி குரலில் தமிழகத்தின் பாரம்பரியம் குறித்த விளக்கங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
செஸ் ஒலிம்பியாட்டி இந்திய அணி:
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 5 அணிகள் பங்கேற்க உள்ளன. ஆடவர் பிரிவில் 3 அணிகளும் மகளிர் பிரிவில் 2 அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஆடவர் அணி:
டீம் ஏ: விதித் குஜராத்தி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன் எரிகியாசி, நாராயணன், சசிகிரண்.
டீம் பி: அதிபன், பிரக்ஞானந்தா,நிஹல் சரின், குகேஷ்,ரௌனக் சத்வானி
டீம் சி: சூர்ய சேகர் கங்குலி, கார்த்திகேயன் முரளி, சேதுராமன், அபிஜித் குப்தா
மகளிர் அணி:
டீம் ஏ: கோனேரு ஹம்பி, ஹரிகா திரோனாவள்ளி, ஆர் வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி
டீம் பி: வந்திகா அகர்வால், சௌமியா சாமிநாதன், மேரி கோம்ஸ், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக்
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் முறை?
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கிளாசிக்கல் முறையில் போட்டிகள் நடைபெறும். இந்த முறையில் முதல் 40 நகர்த்தல்களை 90 நிமிடங்களுக்குள் முடிக்க வேண்டும். அதன்பின்னர் கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்படும். இந்தப் போட்டியில் எப்போது வேண்டுமென்றாலும் வீரர்கள் டிரா செய்யலாம். மொத்தம் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 12 சுற்று போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் அனைத்தும் தினமும் பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்