மேலும் அறிய

Bhuvi opens up on his retirement rumours: "டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வா... உண்மை இதுதான்" - ட்விட்டரில் புவி

2018 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து அடிக்கடி காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

"நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வெளியான செய்தி உண்மை இல்லை" என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோத இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட்ட இந்திய அணி வீரர்களின் பட்டியலில் பந்துவீச்சாளார் புவனேஷ்வர் குமாரின் பெயர் இடம் பெறவில்லை.

Bhuvi opens up on his retirement rumours:

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், அஜிங்கியா ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கே.எல் ராகுல், சஹா ஆகிய இருவரும் உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும். சப்ஸ்டியூட் வீரர்களாக அபிமென்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வஸ்வல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட ஆர்வமில்லை என செய்திகள் வெளியாகி வருகின்றது. டெஸ்ட், ஒரு நாள், டி-20 என மூன்று ஃபார்மாட்டுகளிலும் விளையாட நான் என்போதும் தயாராகவே உள்ளேன். “தவறான தகவல்களை” வைத்து எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பமில்லை போன்ற செய்திகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தனது ட்விட்டர் பதிவில் புவனேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இதுவரை, இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புவனேஷ்வர் குமார், மொத்தம் 63 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். கடைசியாக 2018 ஆம் ஆண்டு தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதனை தொடர்ந்து அடிக்கடி காயம் காரணமாக ஓய்வில் இருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அவர், 5 போட்டிகளில் 3 விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

இப்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவும் புவனேஷ்வரின் பெயர் இடம் பெறாததால் அவர் ஓய்வு பெற உள்ளார் என சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், தற்போது ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்பதை புவனேஷ் குமார் தனது ட்விட்டர் பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவு...கோலி, ரோஹித்தை மீண்டும் எப்போது பார்க்கலாம்?...
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கோலாகலமாக நிறைவடைந்த ஆசிய விளையாட்டுகள்...இந்தியா படைத்த அற்புத சாதனைகள் என்ன?
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
கட்டாய ராணுவ சேவையில் இருந்து விலக்கு... தென் கொரிய கால்பந்து அணிக்கு கிடைத்த பரிசு...
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?
Hope உடன் ஆடும் ஹோப்... சதம் விளாசி சேசிங்கில் துரத்தல்! 352 ரன்களை அடிச்சுடுவாங்களோ?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget