BAN vs NZ T20: பங்களா பாய்ஸ் ஆட்டம் ஓயவில்லை... ஆஸி.,யை தொடர்ந்து நியூசி., தொடரையும் கைப்பற்றி அசத்தல்!
முதல் இரண்டு டி-20 போட்டிகளை வங்கதேச கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டியை நியூசி., வென்றது. அதனை தொடர்ந்து, நான்காவது டி-20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி, டி-20 தொடரை வென்றது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, ஐந்து டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டி-20 போட்டிகளை வங்கதேச கைப்பற்றிய நிலையில், மூன்றாவது போட்டியை நியூசிலாந்து வென்றது. அதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற நான்காவது டி-20 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள வங்கதேச அணி, டி-20 தொடரை வென்று அசத்தியுள்ளது.
நான்காவது டி-20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்துக்கு, வங்கதேச அணி பெளலர்களை சமாளிப்பது சவாலாக இருந்தது. நசும் அகமது நியூசிலாந்தின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். வில் யங் மட்டும் களத்தில் நின்று 46 ரன்கள் சேர்த்தார். 19.3 ஓவர்கள் விளையாடிய நியூசிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 93 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Bangladesh come up with another terrific performance to take an unassailable 3-1 series lead against New Zealand 🙌#BANvNZ fourth T20I report 👇https://t.co/pt7qA6HJuC
— ICC (@ICC) September 8, 2021
எளிதான இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணியும் 19வது ஓவரை போட்டியை இழுத்தது. நியூசிலாந்துக்கு வில் யங்கை போல வங்கதேச அணிக்கு முகமதுல்லா 43 ரன்கள் எடுத்து அணியை கரை சேர்த்தார். இதனால், 19.1 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு வங்கதேச அணி இலக்கை எட்டியது. நான்காவது போட்டியை வென்றதன் மூலம், ஐந்தில் மூன்று போட்டிகளை வென்று நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இது, நியூசிலாந்துக்கு எதிராக வங்கதேச அணி பதிவு செய்துள்ள முதல் டி-20 தொடர் வெற்றியாகும்.
இதே ஆண்டு, முன்னதாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இந்த தொடரை வென்று வங்கதேச அணி அசத்தியது. இந்த தொடரில் வெற்றி பெற்றதன் மூலம், வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தனது முதல் தொடர், முதல் டி-20 தொடரில் வெற்றி கண்டது. அது மட்டுமின்றி, சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் குறைந்தபட்ச ஸ்கோரை ஆஸ்திரேலியாவை சேஸ் செய்யவிடாமல் தடுத்தது. டி-20 உலகக்கோப்பை நடக்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் அணிகளுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 டி-20 தொடர்களையும் ஆஸ்திரேலியா அணி இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.