மேலும் அறிய

Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - குறிவைத்து அடிக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முதலிடம் யாருக்கு?

ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களுடன், பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி:

ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக, ஆசிய விளையாட்டுப் போட்டி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி நேற்று கோலாகலமாக தொடங்கியது.  அக்டோபர் 8ம் தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெற உள்ளது. பிரமாண்டமாக நடைபெற்ற தொடக்க விழாவில் இடம்பெற்று இருந்த, லேசர் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மெய்சிலிர்க்க செய்தது.

போட்டிகள் என்ன?

ஏற்கனவே தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்ற நிலையில், இன்று முதல் பதக்கங்களுக்கான சுற்றுகள் தொடங்கின. அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 40 விளையாட்டுகளில் 481 பந்தயங்கள் நடைபெற உள்ளன. அதில், கிரிக்கெட், வாள்சண்டை, ஹாக்கி, பேட்மிண்டன், கபடி, பளுதூக்குதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, செஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், படகுபந்தயம், கராத்தே, தேக்வாண்டோ, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், நீச்சல், வில்வித்தை, தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டென்னிஸ் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை சார்ந்த போட்டிகள் அடங்கும்.

தொடங்கிய பதக்க வேட்டை:

இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 500 வீரர் விராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் முதல் நாளான இன்று துடுப்பு படகு போட்டி, வாள் வீச்சு, நீச்சல் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. எதிர்பார்த்ததை போன்று சீன வீரர்கள் தங்கப் பதக்கங்களை வெல்வதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேநேரம், இந்தியாவும் பதக்கங்களை வென்று வருகிறது.

பதக்கப்பட்டியல்:

நாடுகள்   தங்கம்   வெள்ளி   வெண்கலம்   மொத்தம்
சீனா 9 1 0 10
ஹாங் காங் (சீனா) 1 0 0 1
இந்தியா 0 3 2 5
உஸ்பெகிஸ்தான் 0 3 1 4
இந்தோனேசியா 0 1 3 4
ஈரான் 0 1 0 1
ஜப்பான் 0 1 0 1
மாகோ (சீனா) 0 0 1 1
தாய்லாந்து 0 0 1 1
வியட்நாம் 0 0 1 1

இந்தியா வென்ற பதக்கங்கள்:

  • 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் பதக்கமாக 10 மீட்டர் ஏர் ரைபிள்  துப்பாக்கிச் சுடுதலில் இந்திய மகளிர் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. இந்த அணியில் ரமிதா, மெஹுலி கோஷ் மற்றும் ஆஷி சௌக்சே ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். பி பிரிவில் நடைபெற்ற போட்டியில் சீனா தங்கப் பதக்கமும்,   மங்கோலியா வெண்கலப் பதக்கமும் வென்றது
  • படகு போட்டி விளையாட்டில் லைட்வெயிட் ஆண்கள் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில்,  அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் 6:28.18 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றனர். சீனா தங்கப் பதக்கமும், உஸ்பெகிஸ்தான் வெண்கலப் பதக்கத்தையும் தனதாக்கியது
  • 8 வீரர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி வென்றது.  இந்தியா 5:43.01 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றது. சீனா தங்கமும், இந்தோனேசியா வெண்கலமும் வென்றன
  • மகளிர் பிரிவில் நான்கு பேர் பங்கேற்கும் துடுப்பு படகு போட்டியில், இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. சீனா தங்கப் பதக்கம் வென்றது
  • மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில், இந்தியாவின் ரமிதா மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் இந்த போட்டியில் 230.1 புள்ளிகளை பெற்றார்.  சீனாவின் ஹான் ஜியாயு 251.3 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும்,  அவரது சகநாட்டவரான ஹுவாங் யூடிங் 252.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கமும் வென்றனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அரைசதம் விளாசிய ரஜத் பட்டிதார்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
RCB vs DC LIVE Score: அரைசதம் விளாசிய ரஜத் பட்டிதார்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அரைசதம் விளாசிய ரஜத் பட்டிதார்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
RCB vs DC LIVE Score: அரைசதம் விளாசிய ரஜத் பட்டிதார்; டெல்லி அணிக்கு 188 ரன்கள் இலக்கு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget