Asian Champions Trophy 2023 Schedule: 16 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ஆசிய ஹாக்கி தொடர்; முழு அட்டவணை விபரம் இதோ
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடரில் மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டத்தை தென் கொரியா வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) ஆகிய இரண்டும் தலா மூன்று கோப்பையை வென்றுள்ளன
போட்டி அட்டவணை:
வியாழன், 3 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: கொரியா VS ஜப்பான்
- மாலை 6.15 மணி: மலேசியா VS பாகிஸ்தான்
- இரவு 8.30 மணி: இந்தியா VS சீனா
வெள்ளிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: கொரியா VS பாகிஸ்தான்
- மாலை 6.15 மணி: சீனா VS மலேசியா
- இரவு 8.30 மணி: இந்தியா VS ஜப்பான்
(சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
ஞாயிற்றுக்கிழமை, 6 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: சீனா VS கொரியா
- மாலை 6.15 மணி: பாகிஸ்தான் VS ஜப்பான்
- இரவு 8.30 மணி: மலேசியா VS இந்தியா
திங்கட்கிழமை, 7 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: ஜப்பான் VS மலேசியா
- மாலை 6.15 மணி: பாகிஸ்தான் VS சீனா
- இரவு 8.30 மணி: கொரியா VS இந்தியா
(செவ்வாய்கிழமை, 8 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
புதன், 9 ஆகஸ்ட் 2023
- பிற்பகல் 4 மணி: ஜப்பான் VS சீனா
- மாலை 6.15 மணி: மலேசியா VS கொரியா
- இரவு 8.30 மணி: இந்தியா VS பாகிஸ்தான்
(வியாழன், 10 ஆகஸ்ட் 2023 - போட்டிகள் எதுவும் இல்லை)
வெள்ளிக்கிழமை, 11 ஆகஸ்ட் 2023
- 15:30: 5/6வது இடம் – லீக் சுற்றில் 5வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 6வது இடம் பிடித்த அணி
- மாலை 6 மணி அரையிறுதி 1 - லீக் சுற்றில் 2வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 3வது இடம் பிடித்த அணி
- இரவு 8.30 மணி: அரையிறுதி 2 - லீக் சுற்றில் 1வது இடம் பிடித்த அணி VS லீக் சுற்றில் 4வது இடம் பிடித்த அணி
சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2023
- மாலை 6 மணி 3/4வது இடம் – லூசர் SF1 VS லூசர் SF2
- இரவு 8.30 மணி: இறுதி - வெற்றியாளர் SF1 VS வெற்றியாளர் SF2