Asian Champions Trophy Tickets: இன்னும் இரு தினங்களில் ஆசிய சாம்பியன்ஷிப் தொடர்.. டிக்கெட் விற்பனை கட்டண விபரம் இதோ..!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது.
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான அட்டவணை ஏற்கனவே ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு வெளியிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் கொரியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மூன்றாவது போட்டியில் இந்தியா பலமான சீனாவை எதிர்கொள்ளவுள்ளது. சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் இந்த போட்டித்தொடர் நடக்கவுள்ளது. இந்தப் தொடரில், கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான், சீனா, இந்தியா என மொத்தம் 6 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கும் தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி முடிவடையவுள்ளது. இதற்காக சென்னைக்கு இந்திய அணி உள்பட 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் முகாமிட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆசிய ஹாக்கி கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடுகளை செய்துள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டத்தை தென் கொரியா வென்றது. இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (2011, 2016 & 2018) மற்றும் பாகிஸ்தான் (2012, 2013 & 2018) ஆகிய இரண்டும் தலா மூன்று கோப்பையை வென்றுள்ளன
டிக்கெட்கள் விற்பனை
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான டிக்கெட்டுகள் தற்போது இணையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. மொத்தம் மூன்று வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதாவது குறைந்த பட்ச டிக்கெட்டின் விலை ரூபாய் 300ஆகவும், அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூபாய் 500ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் டிக்கெட்டுகள் https://in.ticketgenie.in/Tickets/Hero-Asian-Champions-Trophy-2023 என்ற இணையதளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆன்லைன் டிக்கெட்டுகள் திரும்பப் பெறப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 3வதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல் நேரடியாகவும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றது. மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி ஸ்டேடியத்தில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யபடுகின்றன.
நுழைவு வாயில் எண் | அரங்கம் | ஒரு நாளுக்கான டிக்கெட் விலை (ரூ.) |
5 | கலைஞர் நூற்றாண்டு விழா அரங்கம் 1 | ரூ.500/- |
3 | கிழக்கு ஸ்டாண்ட் - பிளாக் ஏ | ரூ.400/- |
3 | கிழக்கு ஸ்டாண்ட் - பிளாக் பி | ரூ.400/- |
4 | தெற்கு ஸ்டாண்ட் - பிளாக் பி | ரூ.300/- |
4 | தெற்கு ஸ்டாண்ட் - பிளாக் ஏ | ரூ.300/- |
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023ல் எந்த அணிகள் பங்கேற்கின்றன?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023ல் இந்தியா, பாகிஸ்தான், தென் கொரியா, மலேசியா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய ஆறு அணிகள் களமிறங்குகின்றன .
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 எங்கு நடைபெறும்?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 சென்னை மேஜர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.
2023 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை எங்கே பார்ப்பது?
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.