Asia Cup 2021: ஆசிய கோப்பை கிரிக்கெட் 2021 ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு..
ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை T20 தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
ஆசிய கோப்பை T20 தொடர் இந்தாண்டு இலங்கையில் ஜூன் மாதம் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் மிகப்பெரிய பாதிப்பை இலங்கை மாகாணங்களில் ஏற்படுத்தியுள்ளதால் ஆசிய கோப்பை தொடர் ரத்து செய்யப்படுவதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகி தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக பாகிஸ்தானில் நடைபெருவதாக இருந்த ஆசிய கோப்பை T 20 தொடர் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழல் காரணமாக "ஆசிய கோப்பை தொடரை ஜூன் மாதம் இங்கு நடத்தமுடியாத நிலை நீடிக்கிறது" இலங்கை கிரிக்கெட்டின் தலைமை செயல் அதிகாரி ஆஷ்லி டி செல்வா இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ரத்து செய்யப்படும் இந்த தொடர் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பின் லிஸ்ட் செய்யப்படும், ஏனென்றால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அனைத்து அணிகளும் ஏற்கனவே தங்களுக்கான தொடரை திட்டமிட்டுள்ளனர், அதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் அதிகப்படியான வாய்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்க பத்து நாட்கள் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது...
தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி இதனை தெரிவித்துள்ள நிலையில், மிக விரைவிலேயே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இந்த தொடர் 2018 ஆண்டு நடைபெற்ற பொது இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்தாண்டு நடைபெற திட்டமிடப்பட்ட ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது, பாகிஸ்தான் சூப்பர் லீகு தொடரும் ஒத்திவைக்கப்பட்டது, அந்த வரிசையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..