Wrestler Arman Wins Gold: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம்.. ஸ்பெயினில் கெத்துகாட்டிய இந்திய வீரர் அமன் செஹ்ராவத்!
ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் 2022: ஸ்பெயினில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்திய மல்யுத்த வீரர் அமன் செஹ்ராவத் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். இதன்மூலம் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற பெருமையை அமான் செஹ்ராவத் பெற்றார். அவர் 57 கிலோ எடைப் பிரிவில் துருக்கியின் அஹ்மத் டுமானை 12-4 என்ற கணக்கில் தோற்கடித்துள்ளார்.
இந்த சீசனில் அமன் பெறும் நான்காவது பதக்கம் இதுவாகும். இதற்கு முன்னதாக அல்மாட்டியில் தங்கமும், டான் கோலோவில் வெள்ளியும், யாசர் டோகுவில் வெண்கலமும் வென்று அமன் செஹ்ராவத் அசத்தினார். மேலும், இந்த தொடரில் மூன்று இந்திய வீரர்கள் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். ஒன்பது மல்யுத்த வீரர்கள் மட்டுமே பங்கேற்று மொத்த இந்திய 6 பதக்கங்களை வென்றுள்ளது.
இதற்கு முன்னதாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற ரவி தஹியா மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கங்கள் மட்டுமே வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Aman becomes the first Indian wrestler to win Gold Medal in the 57 kg category in Under-23 World Wrestling Championship being held in Spain.
— ANI (@ANI) October 23, 2022
அமன் செஹ்ராவத் இந்த தொடரில் கடந்து வந்த பாதை :
முன்னதாக, அமன் செஹ்ராவத் கால் இறுதியில் இலங்கையின் ஹன்சனா மதுஷங்காவை 11-0 என்ற கணக்கிலும், காலிறுதியில் ஜப்பானின் தோஷியா அபேவை 13-2 என்ற கணக்கில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தார். அரையிறுதியில், கிர்கிஸ்தானின் பெக்ஜத் அல்மாஸுக்கு எதிராக 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்த தொடரில் தனது பதக்கத்தை உறுதி செய்தார். இறுதியில், துருக்கியின் அஹ்மத் டுமானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா வெல்லும் ஆறாவது பதக்கம் இதுவாகும்.
Aman Sehrawat becomes the first Indian wrestler to win🥇at the U-23 Worlds in Spain. He beats Ahmet Duman of Turkey 12-4 in the 57kg category. The 18-year old goes one better than Olympic medallists Ravi Dahiya and Bajrang Punia both of whom have a silver at the U-23 worlds. pic.twitter.com/ICwoSeQbfF
— jonathan selvaraj (@jon_selvaraj) October 22, 2022
தங்க பதக்கம் வென்ற மற்ற இந்திய வீரர்கள் :
பதக்கங்களை இந்தியா அள்ளியதன்மூலம் பதக்கப் பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான மல்யுத்தம் 50 கிலோ பிரிவில் அங்குஷ் வெள்ளிப் பதக்கமும், 59 கிலோ பிரிவில் மான்சி அஹ்லாவத் வெண்கலப் பதக்கமும் வென்றனர். தொடர்ச்சியாக, நித்தேஷ் மற்றும் விகாஸ் கிரேக்க-ரோமன் பாணியில் முறையே 97 கிலோ மற்றும் 72 கிலோவில் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். , இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய கிரேக்க-ரோமன் மல்யுத்த வீரர் என்ற பெருமையை சஜன் பன்வாலா பெற்றார்.