Yaksha 2023: ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்ஷா’ கலை திருவிழா! தொடங்கி வைத்தார் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி!
கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்ஷா’கலைத் திருவிழா நேற்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்ஷா’கலைத் திருவிழா நேற்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.
ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி மிக விமரிசையாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப்புகழ் பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.
விழாவின் தொடக்கமாக பண்டிட். ஜெயதீர்த் மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அவரின் அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும் மெய் மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர்.
Pandit Jayateerth Mevundi wove an intricate web of sublime melodies, enchanting everyone with his mastery of Hindustani Classical Music at Yaksha 2023 in Sadhguru's presence. pic.twitter.com/bJv0Je7IeH
— Isha Foundation (@ishafoundation) February 15, 2023
அகில இந்திய வானொலியில் 'ஏ-டாப்' கிரேடு பெற்ற, 'கிரானா கரானா-வின் ஒளி' என வர்ணிக்கப்படும் ஜெயதீர்த் மேவுண்டி பண்டிட். ஜஸ்ராஜ் கவுரவ் புரஸ்கார், யங் மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத் கவுரவ் புரஸ்கார், சண்முகானந்தா சங்கீத் ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்று (பிப். 16) புல்லாங்குழல் இசைக்கலைஞர் சஷாங்க் சுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியும், நாளை (பிப். 17) மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.