Margazhi 2024: பக்தர்களே! மார்கழியில் செய்ய வேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன?
Margazhi 2024 : தமிழ் மாதமான மார்கழியின் என்னென்ன வேண்டும்? என்னென்ன செய்யக்கூடாது? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
Margazhi Month 2024 - மார்கழி மாதம்: மார்கழி மாதம் என்றாலே நமக்கு நினைவு வருவது குளிர் மற்றும் பணி தான். அதேபோன்று மார்கழி மாதம் பல்வேறு கோயில்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதும் வழக்கமாக உள்ளது. மார்கழி மாதம் வந்தாலே காலை வேலையில் பஜனை நடைபெறுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
மார்கழி மாதம் ஏன் சிறப்பாக பார்க்கப்படுகிறது ? - Why Margazhi Month Is Auspicious
இந்து புராண நம்பிக்கையின் அடிப்படையில் தேவர்களுக்கு ஒரு நாள் என்பது, மனிதர்களுக்கு ஒரு வருடம் என நம்பப்படுகிறது. அந்த வகையில் பார்க்கும்போது ஆடி மாதம் முதல் மார்கழி வரை தேவர்களுக்கு இரவு பொழுதாக இருக்கும் எனவும் நம்பிக்கை உள்ளது. பொதுவாக சிறந்த நேரம் என்பது பிரம்ம முகூர்த்தம் கருதப்படுகிறது. அதை வைத்துப் பார்க்கும்போது, மார்கழி மாதம் தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறது. எனவே தேவர்களுக்கு பிரம்ம முகூர்த்தமாக இருக்கும் இந்த நேரம் என்பது, கடவுளை வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படுகிறது.
காக்கும் கடவுளாக பார்க்கக்கூடிய மகாவிஷ்ணு "மாதங்களில் நான் மார்கழி" என தெரிவித்ததாக கூற்றும் இருக்கிறது. அதனால்தான் விஷ்ணு கோயில்களில் மார்கழி மாதம் முழுவதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் மாதமாக இருந்து வருகிறது.
என்னென்ன செய்யலாம் ?
திருமணம் ஆகாத பெண்கள் 'பாவை' நோன்பு வைத்தால் பிடித்த கணவர் கிடைப்பார் மற்றும் விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்டாள் மார்கழி மாதம் நோன்பு இருந்து, பெருமாளை கணவராக அடைந்தார் என்பது நம்பிக்கையாக உள்ளது. எனவே திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் விரதம் இருந்தால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
மார்கழியில் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து, கோலம் போட வேண்டும், அவ்வாறு செய்தால் நமது பீடைகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மார்கழி மாதத்தில் அதிகாலையிலே குளித்துவிட்டு வீட்டில் விளக்கு ஏற்றினால் மகாலட்சுமி அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பசுஞ்சாண உருண்டையில் பூசணிப்பூ சொறுகி, கோலத்தின் மீது வைத்து வழிபடுவதும் சடங்கு மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. வருடம் முழுவயதும் கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் மார்கழியில் சென்றால் ஆண்டு முழுவது சென்ற பலன்கள் கிடைக்குமாம்.
மார்கழி மாதம் சிறப்புகள் என்ன ?
ஒரு சில இதிகாசங்கள் படி மகாபாரத யுத்தம் மார்கழியில் தான் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. மகாவிஷ்ணுவின் உகந்த நாளான வைகுண்ட ஏகாதசியும் மார்கழியில் தான் வருகிறது.
திருப்பதியில் கூட மார்கழி மாதம் முழுவதும் காலையில் திருப்பாவை பாடப்படுகிறது. மகாவிஷ்ணு கிருஷ்ண அவதாரத்தில் இருந்தபோது, இந்திரனால் பெருமழை உருவாக்கப்பட்ட போது, கோவர்தகிரி மலையை தூக்கி கிருஷ்ணர் மக்களை காப்பாற்றியதும் மார்கழி மாதத்தில் தான்.
மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது என்ன?
மார்கழி மாதம் மகத்துவம் நிறைந்த மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் கடவுளுக்கு சேவை செய்வதையும் கடவுளை வணங்குவதையும் முதல் பணியாக செய்ய வேண்டும் என்பதால், வேறு எந்த சுப நிகழ்ச்சி மேற்கொள்ளவில்லை. இதனாலே மார்கழி மாதத்தில் திருமணம் நடத்தக்கூடாது என்ற கூற்றும் பரவலாக தொடங்கியதாக கூறப்படுகிறது.