மேலும் அறிய

Diwali 2022 Puja: தீபாவளி கொண்டாட காத்திருக்கீங்களா?: சுப முகூர்த்தம், பூஜை விதி, வரலாறு, முக்கியத்துவம் என்ன?

Diwali Puja Time 2022: தீபாவளி எப்போதுமே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகை. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான இந்தியர்களும் மதங்கள் கடந்து ஒளியின் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

தீபாவளி எப்போதுமே மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகை. இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளில் வாழும் பெரும்பாலான இந்தியர்களும் மதங்கள் கடந்து ஒளியின் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் பரப்பும் பண்டிகையாகக் கருதப்படுகிறது.

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்துக்கள் தங்கள் வீடுகளை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்கின்றனர். விளக்குகள், பூக்கள், ரங்கோலி கோலம், மெழுகுவர்த்தி என்று மக்கள் வீட்டை அலங்கரிக்கின்றனர். வீட்டில் மகாலக்‌ஷ்மி பூஜைக்காக பல்வேறு பிரயத்னங்களை மேற்கொள்கின்றனர். மஹாலக்‌ஷ்மி செல்வத்தை அருளும் தேவி என்பதால் லக்‌ஷ்மி கடாட்சத்தைப் பெற பல்வேறு பூஜைகளை செய்கின்றனர்.

தீபாவளி 2022: என்று தொடங்கி எப்போது முடிகிறது:

5 நாட்கள் தீபாவளி கொண்டாட்டம் தந்தேராஸ் நாளில் தொடங்கி பையா தூஜ் பண்டிகையுடன் முடிவடைகிறது. தீபாவளி பண்டிகை இந்து மாதமான கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 22 ஆம் தேதி தந்தேராஸ் தொடங்குகிறது. துவாதசி திதியன்று இது வருகிறது.
தீபாவளி இரண்டாம் நாள் த்ரயோதசி திதி நாளில் வருகிறது. இதனை சோட்டி தீபாவளி எனக் கூறுகின்றனர். இந்த நாளில் ஹனுமனை பூஜித்து வழிபடுகின்றனர்.
தீபாவளி மூன்றாம் நாள் சதுர்தசி திதியில் வருகிறது. இந்த நாளில் மக்கள் மகாலக்‌ஷ்மியை வணங்குகின்றனர். அன்றைய நாளில் வீடுகளில் விளக்கேற்றி வணங்குவர்.
தீபாவளி நான்காம் நாளில் அமாவசை திதி வரும். அன்றைய தினம் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
கடைசியாக ப்ரதிபடா திதியன்று தீபாவளி 5ஆம் நாளில் கோவர்த்தன பூஜை நடத்தப்படுகிறது.
தீபாவளி கொண்டாடும் நேரம்:
அக்டோபர் 24ஆம் தேதி லக்‌ஷ்மி பூஜைகள் கடைபிடிக்கப்படும். இதற்கான முகூர்த்த நேரம் காலை 6.53 மணி முதல் 8.16 வரை. இது ஒவ்வொரு நகரத்திலும் மாறுபடும்.

பூஜை செய்வது எப்படி?
இந்த நாளில் விநாயகரையும், லக்‌ஷ்மியையும் பூஜித்து ஆசியை வேண்டுவது நலம். மோதக், அல்வா ஆகியனவற்றை செய்து படைப்பார்கள். பூஜை முடிந்த பின்னர் விளக்கேற்றி, பட்டாசுகள் வெடித்து தீய சக்திகளை விரட்ட வேண்டும்.

தீபாவளியின் சிறப்பு தான் என்ன?
தீபாவளி என்பது இந்து சாஸ்திரங்களின் படி ராமர் ராவணனை வென்ற நாளாகும். மேலும் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் ராமர் வனவாசம் முடித்து சீதாவுடன் அயோத்திக்கும் திரும்பிய நாள் தான் தீபாவளி என்று கொண்டாடப்படுகிறது என்ற நம்பிக்கையும் உள்ளது.

பாய் தூஜ் விழா எதற்காகக் கொண்டாடப்படுகிறது:
பௌ-பீஜ் (Bhau-beej) அல்லது பாய் தூஜ் (Bhai Dooj) அல்லது பாய் போட்டா (Bhai Phota) என்றெல்லாம் குறிப்பிடப்படும் இந்துக்களின் விழா வட இந்தியாவில் தீபாவளித் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்களின் அண்ணன் தம்பியரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலனுக்காக சகோதரிகள் வேண்டுதல் நிகழ்த்துவதும் வெற்றித்திலகம் இடுவதும் சகோதரர்கள் தங்கள் பெண் உடன்பிறப்புகளுக்காக பரிசுகள் வாங்கிவருவதும் வழைமையாகும். இந்த விழா வங்காளம், மகாராஷ்டிரம், கொங்கன் பகுதிகளிலும் கர்நாடகம் மற்றும் கோவாவின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

நேபாளத்திலும் இது முதன்மையான சமயவிழாவாக உள்ளது. இந்துத் தொன்மவியல் கதைகளின்படி தீபாவளித் திருநாளில் நரகாசுரனை வென்றபின்னர் கிருட்டினன் தனது தங்கை சுபத்திரையை காண வந்தபோது சுபத்திரை அவருக்கு விருந்துகள் அளித்து வெற்றித்திலகமிட்டதை நினைவு கூறுமுகமாக இந்தத் திருநாள் கொண்டாடப் படுவதாக்க் கூறப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget