மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் : ரூபாய் நோட்டு விநாயகர், இலவச விநாயகர்... காஞ்சிபுரம் செங்கல்பட்டு சதுர்த்தி ஒரு ரவுண்ட்-அப்..
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவில் நகரமான காஞ்சி மாநகரிலுள்ள ஏலேல சிங்க விநாயகர் கோவிலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள புதிய ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்
மாநகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி பொதுமக்கள் வழிபாடு, விழாகோலம் பூண்ட காஞ்சி மாநகரம்
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது இவ்வாண்டு எவ்வித கட்டுபாடுகளுமின்றி இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விநாயகர் திருஉருவ சிலைகளை நிறுவி கொண்டாடிட தமிழக அரசானது அனுமதி வழங்கிய நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தி பெருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவில் நகரம் என்று சொல்லப்படகூடிய காஞ்சிபுரத்தில் அங்காங்கே விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெருவிலுள்ள ஏலேலோ சிங்க சிங்க விநாயகர் கோவில் காலை அபிஷேகமானது நடைபெற்று வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு 1ரூபாய், 2ரூபாய், 5ரூபாய், 10ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100ரூபாய், 200 ரூபாய், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளினால் கருவறை முழுவதும் மொத்தம் 15இலட்சம் ரூபாயில் அலங்கரிக்கப்பட்டு ஏலேலோ சிங்க விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.இதனையெடுத்து புதிய ரூபாய் நோட்டுகளினால் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஏலேலோ சிங்க விநாயக பெருமானை பொதுமக்கள் மனமுறுகி வணங்கி வழிபட்டனர்.
அதேபோல் ஆண் வாரிசுகளுக்கு அதிபதியாய் திகழக்கூடிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் சன்னதி தெருவிலுள்ள பொய்யாமுடி விநாயகருக்கு சிறப்பு அபிஷகமானது நடைபெற்று அதனைதொடர்ந்து விபூதி அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் திருஉருவ சிலைக்கு ஆராதனை நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானங்களும் வழங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி காஞ்சிபுரம் மாநகரமே விழா கோலம் பூண்டுள்ளது.
செங்கல்பட்டில் இலவசமாக விநாயகர் சிலை வழங்கி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
செங்கல்பட்டு மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் திருக்கோவிலில் இன்று விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட தொண்டர் அணி பாலாஜி தலைமையில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக விநாயகர் சிலை கொடுத்து கொண்டாடினார்கள். காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவில் நிர்வாகத்திடம் பத்தாயிரம் ரூபாய் ரொக்க பணம் நன்கொடையாக அளித்தனர்.
காஞ்சிபுரம் ஏலேல சிங்க விநாயகருக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டதுhttps://t.co/wupaoCQKa2 | #VinayagarChathurthi #Vinayagar #GaneshaChaturthi #GaneshChaturthi2022 pic.twitter.com/SJzGz7xHB4
— ABP Nadu (@abpnadu) August 31, 2022
பின்பு பக்தர் கோடிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவருமே பிரசித்தி பெற்ற சக்தி விநாயகர் திருக்கோவிலில் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசன மேற்கொண்டனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஆன்மிகம்
திருவண்ணாமலை
வேலைவாய்ப்பு
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion