மேலும் அறிய

விநாயகர் சதுர்த்தி: சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கிய "கணபதி தரிசனம்" திருவிழா

இந்த ஆண்டு புதிய வரவாக அரிசி, நெல், கொள்ளு, எள்ளு, மொச்சை பயிர், துவரம் பருப்பு, பச்சை பயிர், கொண்டக்கடலை போன்ற உணவு தானியங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகமான பூம்புகார் விற்பனை நிலையத்தில் 'கணபதி தரிசனம் திருவிழா' என்ற பெயரில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தி வருகிறது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இதில் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு இவைகளை கைவினை கலைகள் மூலம் உருவாக்கப்படும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரமாகவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு பல விருதுகளை கொடுத்து ஊக்குவித்து மற்றும் கைவினை கலைகள் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது. 

விநாயகர் சதுர்த்தி: சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில்  தொடங்கிய

கைவினைக் கலைஞர்கள், பொது மக்களும் பயன்பெறும் வகையில் பண்டிகை காலங்களிலும் மற்றும் விழா காலங்களிலும் பல கண்காட்சிகளை சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையம் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'கணபதி தரிசனம்' என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி 22.08.2022 முதல் 31.08.2022 வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் சிறப்பு அம்சமாக விநாயகரின் திருவுருவம் கொண்ட களிமண், பஞ்சலோகம், பித்தளை, வாகை மர சிற்பங்கள், சந்தன மரச் சிற்பங்கள் மற்றும் துகள் பொம்மைகள் போன்ற எண்ணற்ற வகையான விநாயகர் சிலைகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. களிமண் விநாயகர் அரை அடி முதல் இரண்டரை அடி வரை, பஞ்சலோக விநாயகர், பித்தளை விநாயகர், சித்தி விநாயகர், பஞ்சமுக விநாயகர், வெண் மர விநாயகர், சந்தன மர விநாயகர், கருப்பு உலோக விநாயகர், வெள்ளை உலோக விநாயகர், மார்பில் துகில் விநாயகர், வெள்ளெருக்கு விநாயகர், சுவரில் பொருத்த கூடிய பித்தளை விநாயகர், தஞ்சாவூர் ஓவிய விநாயகர், கருங்கல் விநாயகர், பச்சைக்கல் விநாயகர், நவதானிய விநாயகர், சன் ஸ்டோன் விநாயகர் போன்ற எண்ணற்ற வகையில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு புதிய வரவாக அரிசி, நெல், கொள்ளு, எள்ளு, மொச்சை பயிர், துவரம் பருப்பு, பச்சை பயிர், கொண்டக்கடலை போன்ற உணவு தானியங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த தானிய விநாயகர் சிலைகள் ஒவ்வொரு ராசியை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. இது மட்டுமின்றி பூஜை பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

விநாயகர் சதுர்த்தி: சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில்  தொடங்கிய

இந்த ஆண்டு கண்காட்சியில் சுமார் ரூபாய். 8 இலட்சம் வரை விற்பனை எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ. 100 முதல் ரூ. 62,000 விலை வரை 5,000 வகையான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திற்கும் 10% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இக்கண்காட்சி குறித்து மேலாளர் நரேந்திர போஸ் கூறுகையில், இக்கண்காட்சியில் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை சேலம் மாநகர மக்கள் வாங்கி தங்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடும், மேலும் இந்த பொம்மைகள் மற்றும் சிலைகளை உற்பத்தி செய்யும் கைவினை  கலைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்று கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
”துளியும் இல்லாத பாதுகாப்பு” கீழ்ப்பாக்கம் பாலியல் சீண்டல் விவகாரம்.. ஈபிஎஸ் காட்டம்
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
ஆசிரியர்களே..ஜன.23-க்குள் இதை செய்ங்க; தொடக்கக் கல்வி இயக்குநரகம் உத்தரவு-  என்ன தெரியுமா?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
அடடே... பிப்.28 முதல் எமிஸ் பணிகளில் இருந்து ஆசிரியர்களுக்கு விடுதலை- என்ன வேலையெல்லாம் கிடையாது?
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?
’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Embed widget