Vinayagar Chaturthi 2023: தூத்துக்குடி மாவட்டம் கொம்மடி கோட்டையில் தயாராகி வரும் மாசில்லா விநாயகர் சிலைகள்
விநாயகர் சிலைகள் மாவு வகைகள், தென்னந் தும்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் நீர் நிலைகளில் கரையும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் கொம்மடி கோட்டையில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடி கோட்டை வாலை குருசாமி கோயில் வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக காஞ்சிபுரம் பகுதியில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட சிலை வடிக்கும் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு கடந்த ஒன்றரை மாத காலமாக விநாயகர் சிலை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன.
தற்போது சிலைகள் தயாராக உள்ளன. பொது இடங்களில் வைத்து வழிபட ஒன்பதடி 7 அடி 5 மற்றும் 3 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலைகள் பல வடிவங்களில் வண்ணங்களில் உள்ளன வீடுகளில் பிரதேச செய்து வழிபட ஒன்றரை அடி உயரம் உள்ள விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
மயில், கருடன், சிங்கம், மான் உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது இது போலவும் பசு எலியின் மீது அமர்ந்த நிலையில் பரமேஸ்வரன் கையில் ஏந்திய நிலை என பல வடிவங்களில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கற்பக விநாயகர், விக்னேஸ்வர விநாயகர், கணபதி விநாயகர், மகா கணபதி விநாயகர், வீர கணபதி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சிலைகளை இந்து முன்னணி நிர்வாகிகள் அவர்களது பகுதிகளுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்வதில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகளிடம் கேட்டபோது, கொம்மடி கோட்டையில் கடந்த 30 ஆண்டுகளாக சதுர்த்தி விழாவுக்காக அரசியல் விதிமுறைகள் இப்படி விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன இங்கு தற்போது நான் இருக்கும் மேற்பட்ட சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விளாத்திகுளம், வேம்பார், தூத்துக்குடி மாநகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை தயாரிக்கப்பட்டு நிர்வாகி எடுத்து குறைந்த விலையில் விநியோகம் செய்யப்படுகின்றன இதில் கிடைக்கப்பெறும் வருவாய் மூலம் நல உதவிகள் செய்யப்படும் என்றார்.
கொம்மடி கோட்டையில் விதவிதமான விநாயகர் சிலைகள் மாவு வகைகள், தென்னந் தும்பு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் எளிதில் நீர் நிலைகளில் கரையும் வகையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.