Thirukkadaiyur: திருக்கடையூர் சென்ற புஸ்ஸிஆனந்த்.. குடும்பத்தினருடன் கோயிலில் சிறப்பு வழிபாடு!
திருக்கடையூர் கோயிலில் விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸிஆனந்த் குடும்பத்தினருடன் வந்து தனது 59 வயது முடிந்ததை ஒட்டி 60 வயது தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
இதனால், இங்கு 60 தொடங்குபவர்கள் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்தும், திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த நம்பிக்கை காரணமாக இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோன்று ஆண்டு இக்கோயிலில் முழுவதும் திருமண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த பல்வேறு சிறப்புகளையுடைய இக்கோயிலுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான புஸ்ஸி ஆனந்த் குடும்பத்தினருடன் வந்து தனது 59 வயது முடிந்ததை ஒட்டி 60 வயது தொடங்குவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு செய்தார்.
கோயிலுக்கு உள்ளே சென்ற புஸ்ஸி ஆனந்த் கள்ளவர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்காரமூர்த்தி, ஸ்ரீ அபிராமி அம்மன் சந்ததிகளுக்கு சென்று குடும்பத்தினருடன் அர்ச்சனை செய்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து கோயில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். இதில் மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் மாவட்டச் செயலாளர் குட்டி கோபி மற்றும் பொறுப்பாளர்கள் திரளானோர் உடன் இருந்தனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.