மேலும் அறிய

நினைத்ததை நிறைவேற்றும் வரதர்...புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூடும் பக்தர்கள் ...!

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.

புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஒட்டி சுவாமி தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
புரட்டாசி மாதம்
 
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதம் முழுவதும் இந்துக்கள் அனைவரும் விரதம் இருந்து ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் பெருமாளை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். அதன்படி புரட்டாசி மாதம் துவக்கி, முதல் சனிக்கிழமை இன்று கொண்டப்படுவதை ஒட்டி வைணவ திவ்ய தேசங்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 
நினைத்ததை நிறைவேற்றும் வரதர்...புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூடும் பக்தர்கள் ...!
 
தேவராஜ சுவாமி திருக்கோவில்
 
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை ஒட்டி பெருமாளை தரிசனம் செய்வதற்காக உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். புரட்டாசி மாதத்தில் முதல் சனிக்கிழமையை ஒட்டி அதிகாலையிலேயே  வரதராஜ பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டுள்ளது
 
களைகட்ட துவங்கி..
 
காலை நேரத்திலேயே அதிக அளவில் பக்தர்கள் வந்துள்ளதை தொடர்ந்து நீண்ட வரிசையில், ஒரு மணி நேரத்துக்கு மேலாக காத்திருந்து, பெருந்தேவி தாயாரையும், அத்திகிரி மலையில் உள்ள வரதராஜ பெருமாளையும் தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு வருகின்றனர்.புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையே சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்துள்ளதால் கோவில் வளாகமே  களைகட்ட துவங்கி உள்ளது.
 
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 
 
அத்தி வரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 

வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின் போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவியவதும் வழக்கம். இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னத்துகளும் அமைந்துள்ளன .மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget