மேலும் அறிய
Advertisement
Vaikunda Ekadasi: சொர்க்கவாசல் திறப்பின் போது தலைகீழாக கவிழ்ந்த சாமி விக்ரகம் - பக்தர்கள் அதிர்ச்சி
பென்னாகரம் அருகே சொர்க்கவாசல் திறப்பின் போது சுவாமி விக்ரகம் தலைகீழாக கவிழ்ந்ததால், பக்தர்கள் அதிர்ச்சி.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆலேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.
மார்கழி வைகுண்ட ஏகாதசி தினத்தையொட்டி, இன்று பெருமாள் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த அளேபுரம் இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் இன்று சொர்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தில் காத்திருந்தனர். அப்போது சுவாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது. அப்போது சாமி ஊர்வலத்திற்கு சென்ற பக்தர்கள் உற்சாகமாக ஆடி கொண்டிருந்தனர். ஆனால் முறையாக வாகனத்தில் சுவாமி சிலையை கட்டவில்லை, இதன் காரணமாக, பாதி தூரத்திலேயே, சுவாமி சிலை தலைகீழாக, குப்பறக் கவிழ்ந்து விழுந்தது. இதனை கண்ட சாமி எடுத்து சென்றவர்கள், மேலும் சிலை கீழே விழாமல் கையில் தாங்கி பிடித்து கொண்டனர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் தலைகீழாக கவிழ்ந்த சுவாமி விக்ரகம்https://t.co/wupaoCzH82 | #Pennagaram #VaikunthaEkadashi #Sorgavasal pic.twitter.com/KLFoz6jhls
— ABP Nadu (@abpnadu) December 23, 2023
இதனால் சிலைக்கு செய்யப்பட்ட அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது. இதனை தொடர்ந்து, சாமியை இறக்கி வைத்து, மீண்டும் முறைப்படி சாமி சிலை வைத்து அலங்காரங்கள் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமி சிலைகள் பாதுகாப்பாக கட்டி வைத்து, சுவாமி சிலை உரிய முறையில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். மேலும் சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளை சேமிக்க வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவர்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் திருவிழாவின் போது, தேர் நிலைப்புத்தன்மையின் போது, தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று சாமி ஊர்வலத்தின் போது, சாமி கவிழ்ந்த சம்பவம் சுற்று வட்டார கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அளேபுரம் இலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் தேர் கவிழ்வதும், சாமி கவிழ்வதும் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஊருக்கு ஏதேனும் ஆபத்து வரலாம். இதற்கான பரிகார பூஜைகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதுப் போன்ற சம்பவங்களை தடுக்க உரிய பரிகாரங்களை செய்ய வேண்டும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion