திருவிழாக் கோலத்தில் திருவண்ணாமலை... நாக வாகனத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார்..!
Tiruvannamalai Karthigai Deepam 2024: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் தீப உற்சவத்தில் நான்காவது நாளான இன்று நாக வாகனத்தில் அண்ணாமலையார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நினைத்தாலே முக்தி தரும் ஆன்மீக பூமியாக திருவண்ணாமலை இருந்து வருகிறது. சிவபெருமானுக்கு நீர், நிலம்,காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு என்ற ஐந்து பஞ்ச பூதங்களுக்கு தனி கோயில்கள் சிறப்பாக விளங்குகின்றன. திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாக திகழ்ந்து வருகிறது. அக்னி தலமாக இருப்பதால் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் எப்போதும் மிக விமர்சையாக கொண்டாடப்படும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் தீபத்திருவிழாவின் பொழுது பல லட்சக்கணக்கான மக்கள் தீபத் திருவிழாவை பார்க்க குவிவது வழக்கம். இதே போன்று ஒவ்வொரு ஆண்டும் அதற்காக 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
புராண பின்னணி என்ன ?
புராண காலத்தில் திருமால் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கிடையே யார் பெரியவர் என போட்டி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிவபெருமான் அக்னி உருவெடுத்தார். யார் முதலில் தலையையும் மற்றும் அடியையும் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் பெரியவர் என சிவபெருமான் அவர்கள் முன் அசாரியாக தெரிவித்தார். உடனடியாக பன்றி அவதாரம் எடுத்து திருமால் அடியை காண புறப்பட்டார். பிரம்மன் முடியை காண மேல்நோக்கி புறப்பட்டார். ஆனால் இருவராலயும் அடியையும் முடியும் காண முடியவில்லை. இந்த தத்துவத்தை உணர்த்துவதற்காகவே திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஆண்டு தோறும், கொண்டாடப்படுவதாக நம்பப்படுகிறது.
தீபத் திருவிழா 2024 - Karthigai Deepam 2024
இந்த ஆண்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு கடந்த டிசம்பர் நான்காம் தேதி கொடியேற்றத்துடன் மிக விமர்சையாக திருவிழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அன்று முதல் தினமும் காலை மற்றும் இரவு ஆகிய வேலைகளில், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உல்லா பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
நான்காவது நாள் உற்சவம்
மூன்றாவது நாள் மூஷிக வாகனத்தில் விநாயகர், சந்திரசேகரர் சுவாமி வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. நாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி வீதி உலாவில் விழாவில் கலந்துகொண்டனர். தொடர்ந்து திருவண்ணாமலையில் தீபத்திருவிழா நெருங்கி வருவதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
முக்கிய விழாக்கள் எப்போது ?
டிசம்பர் 08 ஆம் தேதி -காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர்- கண்ணாடி ரிஷப வாகனம். இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் வெள்ளிப் பெரிய ரிஷப வாகனம் .
டிசம்பர் 09 ஆம் தேதி -காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - வெள்ளி யானை வாகனம் - 63 நாயன்மார்கள் வீதியுலா. இரவு உற்சவம் - பஞ்சமூர்த்திகள் - வெள்ளி ரதம், வெள்ளி விமானங்கள்.
டிசம்பர் 10 ஆம் தேதி - காலை உற்சவம் - காலை 6 மணிக்கு மேல் 6:48 மணிக்குள் விருச்சக லக்னத்தில் விநாயகர் தேர்வு படம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் - மகாராதங்கள் - தேரோட்டம்.
டிசம்பர் 11 ஆம் தேதி - காலை உற்சவம் - விநாயகர் ,சந்திரசேகர் - குதிரை வாகனம். மாலை உற்சவம் - 4:30 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம் : இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - குதிரை வாகனம்.
டிசம்பர் 12 ஆம் தேதி -காலை உற்சவம் - விநாயகர் , சந்திரசேகர் - புருஷா முனி வாகனம் இரவு உற்சவம் - பஞ்ச மூர்த்திகள் - கைலாச வாகனம் காமதேனு வாகனம்.
டிசம்பர் 13 ஆம் தேதி -அதிகாலை 4 மணிக்கு பரணி தீப தரிசனம். மாலை 6:00 மணிக்கு மகா தீப தரிசனம்.
டிசம்பர் 14 ஆம் தேதி -காலை உற்சவம் - இரவு அயன்குளத்தில் ஸ்ரீ சந்திரசேகரரா தெப்பல்