மேலும் அறிய
Advertisement
ஆம்பூர் அருகே தர்ம சாஸ்தா ஐயப்ப சாமி ஆலயத்தில் தங்க அங்கி அணிவிப்பு
காலை கோ பூஜையை உடன் நிகழ்ச்சி தொடங்கி, ஐயப்ப சுவாமிகளுக்கு இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும் ஐயப்பனுக்கு தங்க அங்கி ஆபரண பெட்டி ஊர்வலமாக எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
ஆம்பூர் அருகே ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தர்ம சாஸ்தா ஐயப்ப சாமி ஆலயத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர், ஆர் பட்டி பகுதியில் அமைந்துள்ள சாஸ்தாபுரத்தில் ஸ்ரீ தர்ம சாஸ்தா சுவாமி ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோயிலில் மூலவருக்கு நான்காம் ஆண்டு தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனையடுத்து காலை கோ பூஜையை உடன் நிகழ்ச்சி தொடங்கி, ஐயப்ப சுவாமிகளுக்கு இருமுடி கட்டுதல் நிகழ்ச்சியும்
ஐயப்பனுக்கு தங்க அங்கி ஆபரண பெட்டி ஊர்வலமாக எடுத்து செல்லுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
வளையல் காரப்பட்டி ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் இருந்து பல்வேறு மேளதாளங்களுடன் கிராமத்தினர் சீர்வரிசையுடன் ஐயப்ப சாமிக்கு தங்க கவசம் அணிவிப்பதற்காக ஊர்வலமாக எடுத்து சென்று ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப சாமி ஆலயத்தில் மூலவர் சாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. இதில் சுற்றுப்புறப் பகுதியில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion