(Source: ECI/ABP News/ABP Majha)
Tirupati Darshan Ticket: திருப்பதியில் இலவச தரிசனத்துக்கான டிக்கெட் நாளை முதல் விநியோகம் - பக்தர்களே இதைப்படிங்க
Tirupati Darshan Ticket Booking: திருப்பதியில் எதிர்வரும் பிப்ரவரி மாதத்துக்கான இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விநியோகிக்கப்படவுள்ளது.
திருப்பதியில் எதிர்வரும் பிப்ரவரி மாதத்துக்கான இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் நாளை முதல் ஆன்லைனில் விநியோகிக்கப்படவுள்ளது.
இலவச டிக்கெட்டுகள்:
View this post on Instagram
பணக்கார கடவுள் எனப்படும் திருப்பதி ஏழு மலையான் கோவிலில் மாதம் தோறும் இலவச தரிசனத்துக்கு இலவச டிக்கெட் திருப்பதி கோவில் தேவஸ்தானம் மூலம் வழங்கப்படுகிறது. அதில், பிப்ரவரி மாதத்துக்கான இலவச தரிசனுத்துக்கான டிக்கெட் நாளை முதல் தேவஸ்தான இணையதளத்தில் மதியம் 3 மணி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். பாதயாத்திரை, இலவச தரிசனம், ரூ.300 கட்டணம், விஐபி என பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 11 ஆம் தேதி வரை திருப்பதியில் சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
ரூ.300 கட்டணத்தில் பரமபத வாசல் வழியாக தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் 10 நாட்களுக்கு 2.50 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்காக இலவசம் மற்றும் ரூ.300 செலுத்துவதன் மூலம் கிடைக்கும் சிறப்பு தரிசனங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டது கவனிக்கத்தக்கது.
tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. அதேசமயம் பாலாலயம் தொடர்பான பணிகள் காரணமாக பிப்ரவரி 22 முதல் 28ம் தேதி வரையில் சிறப்பு தரிசனத்திற்கான அனுமதி இருக்காது எனவும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
பாலாலயம் என்றால் என்ன?
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலின் தங்க கோபுரத்திற்கு பொன் மூலம் பூசப்பட்ட புதிய தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இந்த பணி சுமார் ஆறு மாதகாலம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த சமயத்தில் பாலாலயம் செய்யப்படும்போது வேறு ஒரு மூலவரை ஏற்பாடு செய்யும் பணிகள் நடைபெறும். அதேசமயம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் தற்போது இருக்கும் மூலவரையும் வழிபடலாம். மூலவருக்கு நடைபெறும் கட்டண சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1957- 58 ஆம் ஆண்டில் புதிய தங்க தகடுகள் பொருத்தப்பட்ட போதும், 2018 ஆம் ஆண்டு பாலாலயம் நடைபெற்ற போதும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.