மேலும் அறிய

kanda sashti 2024: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா; எப்போது தொடங்கி முடியும்? - முழு விவரம் இதோ

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாம் திருவிழா சூரசம்ஹாரம் 7ம் தேதி( 07-11-24) வியாழக்கிழமை நடக்கிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா  வரும் 2ம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்குகிறது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2ம்தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.

யாகசாலை பூஜை தொடக்கம்

கந்த சஷ்டி திருவிழா முதல் நாள் 2ம் தேதி (2-11-24) காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு மேல் 6 மணிக்குள் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு புறப்படுகிறார். 7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. அன்று காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், 4. மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது. 2ம் திருவிழாவில் இருந்து 5ஆம் திருவிழா வரை 3,4,5,6ம் தேதி நான்கு நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு யாக பூஜை தொடங்கி,12 மணிக்கு யாகசாலையில்  தீபாராதனை நடைபெற்று 12.45மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை ஆகி பின்னர் மாலை4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

சூரசம்ஹாரம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆறாம் திருவிழா சூரசம்ஹாரம் 7ம் தேதி( 07-11-24) வியாழக்கிழமை நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணிக்கு யாக பூஜை தொடங்கி  மதியம் 12 மணிக்கு யாக சாலையில்  தீபாராதனையும்,12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார். பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது.அன்று 108 மகாதேவர் சன்னதி சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

திருக்கல்யாணம்

ஏழாம் திருவிழா 8ம் தேதி (08-11-24) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், அன்று மாலை 6:00 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு மேல் கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. 8ம் திருவிழா இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும் அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது.9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12ம்திருவிழா மாலை 4.30மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது
ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது" - கனிமொழி சோமு
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Letter | ’’2026-ல் வெற்றி நிச்சயம்த.வெ.க மாநாடுக்கு தயாரா?’’தொண்டர்களுக்கு விஜய் கடிதம்!CJI Sanjiv Khanna | பாஜகவின் சிம்ம சொப்பனம்! சந்திரசூட்டின் நம்பிக்கை!அடுத்த CJI சஞ்சீவ் கண்ணாSalem Rain Police : கண்டுகொள்ளாத மாநகராட்சி? சாக்கடை நீரில் இறங்கிய POLICE! உடனே ஓடிவந்த காவல்துறைTVK Maanadu :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Manaadu : தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
தவெக மாநாட்டில் அஞ்சலை அம்மாள் கட்அவுட்...யார் இந்த அஞ்சலை அம்மாள்... தனி ரூட் எடுக்கும் விஜய்
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
Chennai Diwali Traffic: தீபாவளி கொண்டாட, சொந்த ஊர் போறீங்களா ? எப்ப போலாம் எந்த வழியில போலாம் ?
ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது
ABP Southern Rising LIVE: ”ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே மதம் மற்றும் ஒரு மொழியை கட்டாயப்படுத்த முடியாது" - கனிமொழி சோமு
ABP Southern Rising Summit 2024:
"தென்னிந்தியாவிற்கு வஞ்சகம், அழிவிற்கான அரசியல் செய்யும் மோடி அரசு" - முதல்வர் ரேவந்த் ரெட்டி
TNPSC Reforms: 2024-ல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம்; ஏன்? டிஎன்பிஎஸ்சி தகவல்
TNPSC Reforms: 2024-ல் கணினி வழித் தேர்வு முறை அறிமுகம்; ஏன்? டிஎன்பிஎஸ்சி தகவல்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
Vijay TVK Maanadu: ”பத்திரமாக வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறேன்” - தவெக மாநாட்டிற்கு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்த விஜய்
போதைப்பொருள் கடத்தல் வழக்கு -  முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
போதைப்பொருள் கடத்தல் வழக்கு - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தவறாக பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து - நடந்தது என்ன?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்வில் தவறாக பாடப்பட்ட தமிழ் தாய் வாழ்த்து - நடந்தது என்ன?
Embed widget