திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் தேரோட்டம் - வடம்பிடித்து துவக்கி வைத்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம்
பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் : திண்டிவனத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள சிறப்புவாய்ந்த கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மர் திருக்கோவிலில் வைகாசி மாதம் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 31 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. வைகாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கனகவல்லி தாயார் உடன் லட்சுமி நரசிம்மர் பெருமாள் தேரில் எழுந்தருளினார். தேரை அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். திண்டிவனம் நேரு வீதியில் புறப்பட்ட தேர் நகரின் முக்கிய விதிகளின் வழியாக வலம் வந்தது. பக்தர்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களுடன் உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்தனர். திண்டிவனம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தன்னார்வு தொண்டு நிறுவனம் சார்பாக பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்