மேலும் அறிய

Thiruppavai 18: நப்பின்னையை எழுப்பும் ஆண்டாள்: யார் இவர் தெரியுமா?

Margazhi 18: மார்கழி மாதம் 18வது நாள்: ” மத யானையை படையாக கொண்டவன், புறமுதுகு காட்டாமல் போரிடுபவன்” என நந்தகோபன் புகழ் குறித்து விவரிக்கிறார் ஆண்டாள்

மார்கழி மாதத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.

பதினேழாவது பாடல் மூலம், கண்ணனின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதினெட்டாவது பாடல் மூலம் நப்பின்னையை எழுப்புகிறார்

பதினெட்டாவது பாடல் விளக்கம்:

மத யானையை படையாக கொண்டவன், புறமுதுகு காட்டாமல் போரிடுபவன் நந்தகோபன். அந்த நந்தகோபனின் மருகளாகிய நப்பின்னையே எழுந்திருப்பாயாக..

யசோதையின் சகோதரரான கும்பகோன் என்பவரது மகள்தான் நப்பின்னை. கும்பகோன், தான் வளர்க்கும் காளையை அடக்குபவருக்குத்தான், என் மகளாகிய நப்பின்னையை திருமணம் செய்து தருவேன் என தெரிவிக்கிறார். அக்காளையை, கண்ணபிரான் அடக்கி நப்பின்னையை திருமணம் முடிக்கிறார்.

இப்பாடல் மூலம் கண்ணபிரானுடைய மனைவியாகிய நப்பின்னையே எழுப்புகிறார் ஆண்டாள்.

நான்கு புறத்திலிருந்து கோழிகள் கூவுகின்றன், குயில்களும் கூவுகின்றன.

பூக்களுக்கே வாசனை தரக்கூடிய கூந்தலை உடைவளே...பூக்கள் போல கைகள் உடைய பெண்ணே...

உன் கையால் கதவை திறந்து விடு. ஏனென்றால், உன் கணவன் பெருமைகளை பாடி, அவன் அருள் பெற வந்துள்ளோம் என ஆண்டாள் பாடல் அமைத்திருக்கிறார்.

இதையும் பார்க்க: Thiruppavai 17: தற்பெருமை பேசாத மனமே சிறந்தது: திருப்பாவையில் கருத்தை சொன்ன ஆண்டாள்.!

திருப்பாவை பதினெட்டாவது பாடல் :

உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்

    நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!

 கந்தங் கமழுங் குழலீ! கடைதிறவாய்

   வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்

   பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்

செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப

    வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

ஆண்டாள்:

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.

பக்தி இயக்கம்:

கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னமும் சாதியை பத்திதான் பேசுறீங்க" ராகுல் காந்தி மீது பாஜக டைரக்ட் அட்டாக்!
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
Tirupati Temple: திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை - சந்திரபாபு நாயுடு சொன்னது என்ன?
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
இளம் பெண்கள் மூலம் விரிக்கப்பட்ட வலை.. சிக்கிய பெரிய தலைகள்.. அரசியலில் புயலை கிளப்பும் CD
Weather: இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
இன்று இரவு 7 மாவட்டங்களில் மழை..அப்போ நாளைய வானிலை...
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
Madurai HC: சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது - உயர்நீதிமன்ற கிளை
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டங்கள் என்னென்ன? தெரிஞ்சுக்கோங்க!
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
TNSTC Job: மிஸ் பண்ணாதீங்க... 3,274 இடங்கள்; அரசு ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி? என்ன தகுதி? விவரம்
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
ஜவளித்துறையில் 45 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்பு- மத்திய அரசு தெரிவிப்பு
Embed widget