மேலும் அறிய

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா..மயிலாடுதுறையில் குவிந்த பக்தர்கள்..!

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் 150 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது.

மயிலாடுதுறை, காவிரி நதியின் கரையில் அமைந்த மிகவும் பழமையான நகரம். மயிலாடுதுறை சப்த காசி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. 1.துலா கட்ட விஸ்வநாதர், 2.திருவழந்தூர் விஸ்வநாதர், 3.வள்ளலார் விஸ்வநாதர், 4.படித்துறை விஸ்வநாதர், 5.பெரிய கோயில் விஸ்வநாதர், 6.கூறைநாடு விஸ்வநாதர், 7.தெப்பக்குளம் விஸ்வநாதர் ஆகிய ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் காவிரி ஆற்றின் தென்கரையில் அகஸ்தியரால் வழிபாடு செய்யப்பட்ட தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோயிலில் ஆக்கிரமிப்புகள் காரணமாக பொதுமக்கள் வழிபட முடியாத நிலைமை இருந்து வந்தது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பக்தர்கள் நிதி உதவி உடன் புதிதாக கோயில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு 150 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா..மயிலாடுதுறையில் குவிந்த பக்தர்கள்..!

இதனை ஒட்டி காவிரியில் இருந்து யானை மேல் தீர்த்த குடங்களில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு புனித கடங்களில் நிரப்பப்பட்டது. தொடர்ந்து, 14 யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டு 35 சிவாச்சாரியார்கள் மந்திரம் ஓத நேற்று முன்தினம் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி  நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மகா பூர்ணாகுதியுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. புனித நீர் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ராஜகோபுரங்கள், சுவாமி, அம்பாள் கோபுர கலசங்கள் உள்ளிட்டவற்றிற்கு ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா..மயிலாடுதுறையில் குவிந்த பக்தர்கள்..!

தொடர்ந்து, சுவாமி மற்றும் அம்பாள் பரிவார தெய்வங்களின் மூலவர் சிலைகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. கொட்டும் மழையில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தருமபுர ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், வேளாகுறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் திருப்பனந்தாள் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று  சுவாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற மேலும் சில கோயில் கும்பாபிஷேகம் விழாக்கள்.

ஆக்கூர் ஊராட்சி ஆக்கூர் முக்கூட்டில் உள்ளது முத்து முனீஸ்வர கோயில். இந்த கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 29 -ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 4- கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணாகுதி, மகா தீபாரதனை நடைபெற்றது. பின்னர் காலை 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு. மங்கள வாத்தியம் மற்றும் சிவ வாத்தியம் முழங்க கோயிலை வளம் வந்து விமான கலசங்களை அடைந்தன. தொடர்ந்து தருமபுர ஆதீனம் 27 -வது குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவாச்சாரியார்கள், விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் செய்திருந்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் செம்பனார்கோயில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

150 ஆண்டுகளுக்கு பின் நடந்த தெப்பக்குளம் விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழா..மயிலாடுதுறையில் குவிந்த பக்தர்கள்..!

இதேபோல் கிள்ளியூர் ஊராட்சியில் உள்ள மன்மதன் கோயிலில் கடந்த 30ஆம் தேதி யாகசாலைகள் பூஜைகள் தொடங்கப்பட்டு நேற்று 2 கால யாக பூஜைகள் முடிவடைந்தது. தொடர்ந்து பூர்ணா குதி மகாதீபாரனை நடைபெற்றது. காலை 7:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு விமான கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கிள்ளியூர் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget