மேலும் அறிய

Thaipusam 2025: தஞ்சாவூர் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச விழா உற்சாக கொண்டாட்டம்

தைப்பூச நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் , வழிபாடு நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிப்பட்டனர்.

தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். தை மாதத்தில் பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்த நாள் தைப்பூச திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தைப்பூச தினத்தன்று விரதம் இருந்து முருகனை வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். செல்வம் பெருகும். தொட்ட காரியம் கை கூடும் என்பது பக்தர்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கை.

தஞ்சை மாவட்ட முருகன் கோயில்கள்

அதன்படி தைப்பூச நாளான இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் , வழிபாடு நடைபெற்றது. இதன்படி தஞ்சை பில்லுக்கார தெரு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.  இதேபோல் பூக்கார தெரு சுப்பிரமணியசாமி கோயில், பெரிய கோயிலில் உள்ள முருகர் சன்னதி உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகி தரிசனம் செய்தனர். காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனையும் நிறைவேற்றினர்.

Thaipusam 2025: தஞ்சாவூர் மாவட்ட முருகன் கோயில்களில் தைப்பூச விழா உற்சாக கொண்டாட்டம்

சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
  
சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கிறது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேசுவரர் எழுந்தருளி உள்ளதால் சுந்தரேசுவரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். ஒம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தையான சிவபெருமானுக்கு, மகனாகிய முருகன் உபதேசம் செய்த தலம் என்பதால், முருகப்பெருமான் இக்கோயிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார்.

குருவாகி இருந்து அருளியதால் குருமலையானது

குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோயில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் என அழைக்கப்படுகிறது. 

முருகனை காண குவிந்த பக்தர்கள்

முருகனின் அறுபடைவீடுகளில் இதுவும் ஒன்றாகும். தாளமும் சந்தமும் நிறைந்த மெய்ப்பொருட் துறைப் பாடல்கள் இயற்றிப் பல நூல்களைப் படைத்த அருணகிரிநாதர் மற்றும் நக்கீரர் இவ்வூரில் உள்ள முருகனைப் பாடிய பாடல்கள் திருப்புகழில் திருமுறையில் உள்ளன. கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின்மீது இக்கோயில் அமைந்துள்ளது. ஐந்து நிலையுடன் கூடிய இராஜகோபுரம் தெற்கு நோக்கியுள்ளது. இத்தலத்தின் தல மரம் நெல்லி மரமாகும். முருகன் சன்னதிக்குச் செல்ல தமிழ் ஆண்டுகள் அறுபதைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.

கும்பகோணம் அருகே ஏரகரம் முருகன் கோயிலில் தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு ஆராதனை, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர். இதேபோல் கும்பகோணத்தில் அமைந்துள்ள பால முருகனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிரடி காட்டிய ஸ்டாலின்! ஆப்செண்ட் ஆன மம்தா! பின்னணி என்ன?”நாங்க அண்ணன், தம்பிடா!” ஸ்டாலின் கூட்டத்தில் பவன் கட்சி! ஷாக்கான மோடி, அமித்ஷாNamakkal Collector Uma | ”இதான் தக்காளி சாதமா?கறாராக பேசிய கலெக்டர் ஆடிப்போன அதிகாரிகள்Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
IPL RCB vs KKR: வெற்றியுடன் தொடங்கிய படிதார்! கொல்கத்தாவை கொளுத்திய ஆர்சிபி! கோலி, சால்ட் பயங்கரம்!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
அமித்ஷாவுக்கு தெரியாமல் ஸ்டாலின் கூட்டத்திற்கு ஆள் அனுப்பிய பவன் கல்யான்? ஷாக்கில் பாஜக.!
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
” நாங்க யார்னு தெரியும்ல”- டி.கே.எஸ் பேச்சு...நன்றி சொல்லி கொளுத்தி போட்ட அண்ணாமலை
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் தாங்கள்தான் எஜமானர்கள் - செல்லூர் ராஜூ
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
இன்று இரவு சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை- நாளைக்கு வானிலை எப்படி இருக்கும்?
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
UGC: இந்த பட்டப் படிப்புகளுக்கெல்லாம் இனி வேலை கிடையாது- மீண்டும் எச்சரிக்கை விடுத்த யுஜிசி!
"ஐபிஎல் தொடங்கிடுச்சி.. இவர்களிடம் இருந்து கவனமா இருங்க" எச்சரிக்கும் DGGI
"இந்திய கலாச்சாரத்தின் பெருமை சமஸ்கிருதம்" பதஞ்சலி விழாவில் பாபா ராம்தேவ் புகழாரம்!
Embed widget