மேலும் அறிய

அறுபடை வீடுகள் ஒரே இடத்தில்... நெற்களஞ்சியமாம் நம்ம தஞ்சாவூரில்!!!

முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்கும். இந்த 6 கோயில்களும் 6 ஊர்களில் அமைந்துள்ளது. ஆனால் ஒரே ஊரில் அதுவும் தஞ்சாவூரில் முருகனுக்கு அறுபடை கோயில்கள் இருக்கிறது.

முருகனுக்கு அறுபடை வீடுகள் இருக்கும். இந்த 6 கோயில்களும் 6 ஊர்களில் அமைந்துள்ளது. ஆனால் ஒரே ஊரில் அதுவும் தஞ்சாவூரில் முருகனுக்கு அறுபடை கோயில்கள் இருக்கு தெரியுங்களா. தெரிந்து கொள்வோம். ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் தஞ்சை பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், இந்த ஆறு படைவீடுகளுக்கும் பாதயாத்திரையாக சென்று வழிபடுவது வழக்கம்.

முதல் படைவீடு: தஞ்சை மேல அலங்கம் பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில்தான். மூலவர், குன்றின் மேல் வீற்றிருப்பது போல் உயரமான இடத்தில் உள்ளதால் ‘திருப்பரங்குன்றம்’ என்று அழைக்கப்படுகிறது. வள்ளி - தெய்வானையுடன் திருமணக்கோலத்தில் சுவாமி அருள்பாலிக்கிறார். விநாயகர், இடும்பன், சிவன், பார்வதி, சிவலிங்கம் திருமேனிகளும் உள்ளன. அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. நாயக்க மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில், 250 ஆண்டுகள் பழமையானது. நாயக்க மன்னர்கள் போருக்கு செல்வதற்கு முன்பாக இங்கு ஆயுதங்களை வைத்து வழிபட்டு எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.

2ம் படைவீடு: தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சுப்பிர மணியசாமி கோயில்தான் அது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் முருகப்பெருமான் மனைவிகள் இன்றி தனித்து காணப்படுகிறார். இங்கு கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடக்கிறது.

திருச்செந்தூரில் வாழ்ந்த ஞானி ஒருவர், ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை வைத்திருந்தார். வயோதிகம் காரணமாக இச்சிலையை வேறுயாரிடமாவது ஒப்படைக்க எண்ணினார். அப்போது அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி ஒரு ரெயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்த ரெயில்வே ஊழியரிடம் ஐம்பொன் சிலையை ஒப்படைக்க கூறிவிட்டு மறைந்தார். அதேபோல் அந்த ஞானியும் சிலையை ஒப்படைக்க பின்னர் தஞ்சை வந்த ரெயில்வே ஊழியர், இங்கு ஒரு குடில் அமைத்து முருகனை வழிபட்டார். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால் அனைத்து காரியங்களும் நிறைவேறுகிறது என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அறுபடை வீடுகள் ஒரே இடத்தில்... நெற்களஞ்சியமாம் நம்ம தஞ்சாவூரில்!!!
 
3ம் படைவீடு: தஞ்சை சின்ன அரிசிக்கார தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் மூன்றாம் படைவீடு. இந்திரன் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது. முருகனின் அருகில் மயில் வாகனம் காணப்படும். ஆனால் இங்கு முருகப்பெருமான் சன்னிதியில் யானை உள்ளது அரிய காட்சி. உற்சவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. பொதுவாக நவக்கிரக சன்னிதிகள் வடகிழக்கு ஈசானிய மூலையில் அமைந்திருக்கும். ஆனால் இங்கு தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. அதுவும் ராகுவும், கேதுவும் இடம் மாறி இடம் பெற்றுள்ளன.

4ம் படைவீடு: தஞ்சை ஆட்டுமந்தை தெருவில் உள்ள சுவாமிநாத சுவாமி கோயில்தான் அது. சுவாமி மலையில் போல் இங்கும் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சை பெரிய கோவிலில் இருப்பதை போல பிரகதீஸ்வரர், பெரியநாயகி அம்மன், நவக்கிரக தலங்கள், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர், பிரம்மா, ஆஞ்சநேயர் கணபதி, விஷ்ணு துர்க்கை, இடும்பன் என முருகனைத் தவிர 12 சன்னதிகள் உள்ளன. ஒவ்வொரு சன்னிதிகளும் அதற்குண்டான வாஸ்து முறையில் உள்ளது தனிச்சிறப்பு. இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் கஷ்டம் தீரும் என்பது ஐதீகம். சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம், முத்துப்பல்லக்கு, பங்குனி உத்திரம் என விழாக்கள் விமரிசையாக நடக்கிறது.

அறுபடை வீடுகள் ஒரே இடத்தில்... நெற்களஞ்சியமாம் நம்ம தஞ்சாவூரில்!!!

5ம் படைவீடு : தஞ்சை கீழவாசல் குறிச்சி தெருவில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயில் 5ம் படைவீடு. இங்கு வள்ளி- தெய்வானையுடன் சுவாமி அருள்பாலிக்கிறார். இந்த கோயில் கட்டப்பட்டு 150 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இங்கு முதலில் வேல் மட்டும் வைத்து வழிபட்டு வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் வள்ளி - தெய்வானையுடன் கூடிய சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். முருகப்பெருமானின் கலியுக அவதாரமான திருஞானசம்பந்தருக்கும் இங்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோயிலில் தரிசனம் செய்தால் நிலம், வீடு உள்ளிட்ட சொத்து பிரச்சினைகள் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். இத்தலம் திருத்தணி என்று அழைக்கப்படுகிறது.

6ம் படைவீடு: தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆறாம் படைவீடு. மன்னர் சரபோஜி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முருகப்பெருமான் கனவில் வந்து சொன்னது போல்  பழனி மலை அடிவாரத்தில் இருந்து ஒரு முருகன் சிலையை இங்கு கொண்டு வந்து நிறுவியிருக்கிறார்கள். பழனி முருகன் கோவில் இருப்பதைப் போல இது அமைந்திருந்தாலும், இதனை ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலை என்று பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget