மேலும் அறிய

Thaipusam 2023 : தைப்பூச திருவிழா: இளநீர், மயில் காவடி எடுத்து முருகனை தரிசித்த கரூர் பக்தர்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பாலமுருகன்.

தைப்பூசத் தேரோட்டம் ரத்துமயில் காவடி, இளநீர் காவடி எடுத்து பொதுமக்கள் சாமி தரிசனம்.

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையத்தில்  பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால், அதற்கான திருப்பணிவேலைகள் கடந்த ஆறு மாதங்களாக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் தைப்பூசத்தை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணியசாமி கோவில் தேரோட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.  கும்பாபிஷேக பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ஆண்டு தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Thaipusam 2023 : தைப்பூச திருவிழா: இளநீர், மயில் காவடி எடுத்து முருகனை தரிசித்த கரூர் பக்தர்கள்

இருப்பினும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று பக்தர்கள் புகழிமலை மேல் ஏறி சென்று பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் இளநீர் காவடி, மயில் காவடி எடுத்து செல்ல பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் காவடி எடுத்து வந்து புகழி மலை முருகனை தரிசித்து சென்றனர். இதே போன்று க.பரமத்தி அருகே உள்ள பாலமலை முருகன் கோவிலில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் காவடி எடுத்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

Thaipusam 2023 : தைப்பூச திருவிழா: இளநீர், மயில் காவடி எடுத்து முருகனை தரிசித்த கரூர் பக்தர்கள்

தைப்பூசத்தை முன்னிட்டு பாலமுருகன் சிறப்பு அபிஷேகம்.

தைப்பூசத்தை முன்னிட்டு தேர் வீதி விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த பாலமுருகன். உலகம் முழுவதும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு முருகன் ஆலயங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் கரூர் நகர பகுதியான தேர்வீதி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள அழகன் பாலமுருகனுக்கு தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம்,விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Thaipusam 2023 : தைப்பூச திருவிழா: இளநீர், மயில் காவடி எடுத்து முருகனை தரிசித்த கரூர் பக்தர்கள்

அதைத் தொடர்ந்து சுவாமிக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் பட்டாடை உடுத்தி, ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த அழகன் பாலமுருகனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு, தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. தேர் வீதி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பூச பாலமுருகன் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரத்தைக் காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

குளித்தலையில் சுவாமிகள் விடையாற்றி நிகழ்வு.

குளித்தலை  கடம்பனேஸ்வரர் கோவில் தைப்பூச திருவிழாவில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் இரவில் காவேரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து குளித்தலை அய்யர்மலை, ராஜேந்திரம், கருப்பத்தூர், முசிறி திருஈங்கோய் மலை, வெள்ளூர், பெட்டவாய்த்தலை உள்ளிட்ட 8 ஊர் சிவாலயம் சோமஸ் கந்தர் அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் ஒரே இடத்தில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். இரண்டாம் நாளான காவேரி ஆற்று படுகையில் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாரதனை நடந்தது. இதை தொடர்ந்து பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை முன் ஐந்து ஊர் சுவாமிகள் சந்திப்பு மற்றும் தீபாரதனைகளுடன் விடையாற்றி நிகழ்வு நடந்தது. எட்டு ஊரு சுவாமிகள் தீபாராதனை உடன் விடை பெற்று தங்கள் கோவில்களுக்கு திரும்பினர். தைப்பூச நிறைவு நிகழ்ச்சியில் பல்லாரக் காண பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
அண்ணன், தம்பிக்கு ராக்கி கட்ட முடியாதா? - கவலை வேண்டாம் போஸ்ட் ஆபிஸின் புதிய ஆஃபர்கள்.. இப்பவே புக் பண்ணுங்க
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
புனிதப்பயணம் மேற்கொள்ள 5000 ரூபாய் அரசு மானியம்: விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இதோ...
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 
வளையல்களால் மூழ்கிய வல்லக்கோட்டை அம்மன் சந்நிதி! சிலிர்க்க வைக்கும் ஆடிப்பூரம் வைபவம்! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget