கரூரில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு எட்டுக்கை காளியம்மனுக்கு சிறப்பு ஆராதனை
கனக தோணி அம்மன் ஆலயத்தை சுற்றிலும் எட்டு திசைகளையும் எட்டுகை காளியம்மன் சிலை அமைந்துள்ளது.150 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த சூரிய கிரகணத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு எட்டுக்கை காளியம்மன் மற்றும் கனகத்தோனி அம்மனுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கே.பேட்டை ஊராட்சி திம்மாச்சிபுரம் கிராமத்தில் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் காவிரி தென்கரையில் கனக தோணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வானவியல் சாஸ்திரப்படி சூரிய கலையின் மேல் பாகத்தில் அமைந்துள்ள கோவில் மிகவும் புகழ்பெற்ற சக்தி வாய்ந்த கோவிலாகும்.
இக்கோவிலுள்ள கனக தோணி அம்மன் ஆலயத்தை சுற்றிலும் எட்டு திசைகளையும் எட்டுகை காளியம்மன் சிலை அமைந்துள்ளது. 150 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த சூரிய கிரகணத்தை முன்னிட்டு எட்டுக்கை காளியம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், சந்தன பழங்கள் மற்றும் வாசனை திரவங்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
அதை தொடர்ந்து எட்டுக்கை காளியம்மன் மற்றும் கனக தோணி அம்மனுக்கு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. சூரிய கலையின் மேல் பாகத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவிலில் குடமுழக்கு விழா நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் பக்தர்கள் கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சிறப்பு அபிஷேக ஆராதனையில் திருச்சி மாவட்டம் சீனிவாசநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வக்கீல் ஜெயபகவதி, புகழேந்தி தலைமையில் கோவில் குப்பாட்டுக்காரர்கள், பக்தர்கள் பலர் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நொய்யல் ,ஏப்ரல் 21 நடுப்பாளையம் மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பொங்கல் திருவிழா கரூர் மாவட்டம், புன்னம் சத்திரத்தை அடுத்த நடுப்பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த 3ஆம் தேதி அன்று இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.கடந்த 16ஆம் தேதி இரவு வடிசோறு நிகழ்ச்சி நடைபெற்றது. 17ஆம் தேதி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்த குடங்களுக்கு மேளதாளங்கள் முடங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அதனைத் தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அபிஷேகம் கடந்த 18ஆம் தேதி காலை 10 மணிக்கு மேல் மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி ,தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது . இதில் சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் தரிசனம் செய்து அருள் பெற்றன. இதில், கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மாவிளக்கு பூஜை மாலை சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனர். பின்னர் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன்வைத்து மாவிளக்கு பூஜை செய்தனர். இரவு வான வேடிக்கை நடைபெற்றது. நேற்று முன் தினம் காலை கம்பம் பிடுங்கி கிணற்றில் விழும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.