மேலும் அறிய

Soorasamharam 2024: பக்தர்களே சூரசம்ஹாரம் காண சேலத்தில் நீங்கள் செல்ல வேண்டிய புகழ்பெற்ற முருகன் கோயில்கள்

Soorasamharam 2024 in Tamil: முருகன் தனது வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வு இன்று மாலை சேலத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெறுகிறது.

தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாளாக கருதப்படும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் உலகில் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட உள்ளது. முருகன் தனது வேல் கொண்டு சூரனை வதம் செய்யும் நிகழ்வு இன்று மாலை சேலத்தில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களில் நடைபெறுகிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் பல்வேறு சிறப்புமிக்க, பழமை வாய்ந்த முருகன் கோயில்கள் உள்ளன. 

முத்துமலை முருகன் கோவில்:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர் பகுதியில் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முத்துமாலை முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உலகின் மிக உயர முருகன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு முருகன் சிலை 146 அடியில் மிகப் பிரம்மாண்டமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.

குறிப்பாக இந்த கோயிலில் விசேஷ நாட்களில் மூலஸ்தானத்தில் உள்ள முருகர் வள்ளி தெய்வானை இணைந்து தங்க கவசத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும், இந்த கோயிலில் மாலை தங்கத்தேர் பவனி உலா நடைபெறுவது சிறப்புக்குரிய ஒன்றாகும். முத்துமலை முருகன் கோயில் தற்போது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். 

காவடி பழனி ஆண்டவர் திருக்கோவில்:

சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் சேலம் உருக்கு ஆலை செல்லும் வழியில் அமைந்துள்ள காவடி பழனியாண்டவர் கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இங்கு பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூச நாட்களில் பக்தர்கள் தங்களது நேற்று கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்து வருவர். இந்த கோவிலில் மாலை கோவிலை சுற்றி தங்க தேர் பவனி உலா நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலில் முருகர் பழனியில் உள்ளது போல பால முருகராக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார்.

காளிப்பட்டி முருகன் கோவில்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள காளிப்பட்டியில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காளிப்பட்டி கந்தசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் மிகவும் சிறப்பு மிக்க பழமையான கோவில்களில் ஒன்றான கந்தசாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் திருநாளில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்காரம் செய்யப்படும். இந்த கோவிலில் தைப்பூச நாளன்று கந்தசாமி கோவிலில் சித்தர தேர் மற்றும் விநாயகர் தேர் திருவீதி உலா நடைபெறும். மேலும் தைப்பூச நாளன்று இந்த கோவிலின் அருகில் நடத்தப்படும் கால்நடை கண்காட்சி உலக சிறப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது.

கந்தாஸ்ரமம் திருக்கோவில்:

சேலம் மாநகர பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள மலைக்கோவில்களில் ஒன்றாக கந்தாஸ்ரமம் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் முருகர் கந்த குருவாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் பாவித்து வருகிறார். இந்தக் கோவிலின் கூடுதல் சிறப்பாக பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உள்ளது. கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்கள் மட்டுமின்றி மலை மீது அமைந்துள்ளதால் சுற்றுலா தளம் போல அனைத்து தினங்களிலும் பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை தந்து முருகனே வணங்கிச் செல்வர்.

குமரகிரி தண்டாயுதபாணி கோவில்:

சேலம் மாநகர பகுதியில் மலை மீது அமைந்துள்ள பழமையான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான திருக்கோவில்களில் ஒன்றான குமரகிரி தண்டாயுதபாணி சிறு மலை கோவில் 700 க்கும் மேற்பட்ட படிகளின் மீது ஏறி பின்னர் முருகனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆர்வம் காட்டுவர்.

குறிப்பாக கந்த சஷ்டி, தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் நாட்களில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு வருகை தந்து தங்களது நெற்றிக்கடனை முடிப்பர். கடந்த சில ஆண்டுகளாக குமரகிரி தண்டாயுதபாணி திருக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மலை அடிவாரத்தில் பக்தர்கள் முருகனே தரிசித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
சிவப்பு சூட்கேஸில் கிடந்த இளம்பெண்ணின் உடல்.. பதறிய மக்கள்.. நெடுஞ்சாலையில் பரபரப்பு!
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Top 10 News: முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட டிவீட், செல்லபிராணிகளுக்கான திட்டம் - டாப் 10 செய்திகள்
Embed widget