மேலும் அறிய

மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன் - ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறை

மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழைமைவாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மயிலாடுதுறை அருகே அரபி மொழியில் எழுதப்பட்ட பழைமைவாய்ந்த மிகவும் சிறிய அளவிலான குர்-ஆனை இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நீடூரை சேர்ந்தவர் 61 வயதான அமீனுல்லா. இவர்களது குடும்பத்தினர் பல தலைமுறைகளாக நீடூரில் வசித்து வருகின்றனர். வெளிநாடுகளில் வேலை பார்த்தும், வணிகம் செய்து வந்துள்ளனர் இவர்கள் குடும்பத்தினர். இந்நிலையில் அமீனுல்லா வீட்டில் மிகவும் பழைமையான 6,666 அத்தியாயங்களை 19 பக்கத்தில் அரபி மொழியில் எழுதப்பட்ட மிகவும் சிறிய அளவிலான குர்ஆன் ஒன்றும் சிறிய அளவிலான மெட்டல் பாக்சில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன் - ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறை

தங்களது மூதாதையர்கள் காலத்தில் இருந்து இருக்கும் இந்த குர்ஆன் குறித்து ஆய்வு செய்து எந்த நூற்றாண்டை சேர்ந்தது இதன் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டுமென்று அமீனுல்லா குடும்பத்தினர் அதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தொல்லியல்துறையினர் இதனை கண்டுகொள்ளாததால் அவர் நீதிமன்றத்தை நாடினார். இதுகுறித்து அமீனுல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்களது குடும்பத்தினர் 6 தலைமுறைகளாக பாதுகாத்து வந்த மிகச்சிறிய அளவிலான குர்-ஆன் குறித்து தெரிந்துகொள்ள இந்திய தொல்லியல் துறையை நாடினோம். ஆனால் அவர்கள் அதற்கு சரிவர பதில் அளிக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் குர்-ஆன் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

Uttarkhand Tunnel Collapse: உத்தரகாசியில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதில் மீண்டும் சிக்கல்.. 40 - 50 மணி நேரமாகும் என தகவல்..

மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன் - ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறை

சென்னை மியூசியத்தின் டாக்டர் கண்ணன் என்பவர் ஜெய்புனிஷா என்பவரின் ஆராய்ச்சியைக் கொண்டு இந்த குர்-ஆன் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்திய தொல்லியல்துறை சான்று வழங்கியது. ஆனால், 300 ஆண்டுகளுக்கு மேல் இந்த குர்-ஆனை தங்கள் குடும்பத்தினர் பாதுகாத்து வருகின்றனர். இதன் வயது அதிகமாக இருக்கும் என்பதால் இதை முறையாக ஆய்வு செய்ய வேண்டுமென்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினோம். இந்திய தொல்லியல்துறையினர் சரிவர பணிகளை செய்யாததால் அதன்பிறகு 2018 -ல் டில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இந்த குர்-ஆன் எந்த நூற்றாண்டை சேர்ந்தது என்பதை ஆராய்ந்து வெளியிட வேண்டுமென்று மனு செய்தேன். உச்சநீதிமன்ற உத்தரவின்படி டில்லியை சேர்ந்த முன்னாள் தொல்லியத்துறை அதிகாரி டாக்டர் கவாஜா, ரஹ்மான், சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, வெற்றிச்செல்வி ஆகியோர் அடங்கிய குழுவினர் நீடூர் அமீனுல்லா வீட்டிற்கு வந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறிய அளவிலான அந்த குர்-ஆன் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்த விபரங்களை நீதிமன்றத்தில் தெரிவிப்பதாக கூறிச்சென்றுள்ளனர்.

மயிலாடுதுறையில் உள்ள மிகச்சிறிய குர்-ஆன் - ஆய்வு செய்ய வந்த தொல்லியல் துறை

Sukesh Chandrasekhar : ‘இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த சுகேஷ் சந்திரசேகர்’ எத்தனை சொகுசு கார்கள் வைத்திருக்கிறார் பாருங்கள்..!

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, உதவி தொல்லியல்துறை கண்காணிப்பாளர் வெற்றிச்செல்வி, தொல்லியல்துறை உதவி கண்காணிப்பாளர் மணிவண்ணன்  ஆகியோர் அடங்கிய குழுவினர் நீடூர் அமீனுல்லா வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் தற்போது ஆய்வு செய்ய வந்ததாகவும், அதனால் இதுகுறித்து எவ்வித தகவலும் தெரிவிக்க முடியாது என கூறி சென்றனர். ஆய்வின் போது மயிலாடுதுறை காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
Vaiko On DMK: அண்ணா அங்கீகாரம் கொடுத்தார், திமுக என்னை வெளியேற்றிவிட்டது - வைகோ பரபரப்பு பேச்சு
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget