மேலும் அறிய

காஞ்சிபுரம் குமரகோட்டம்: வெள்ளித் தேரில் எழுந்தருளிய முருகப்பெருமான்! பக்தர்களின் பரவசம்!

Kanchipuram Kumarakottam Temple: "காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளி தேர் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வெள்ளி திருத்தேர் பவனி உற்சவம். பக்தர்களின் அரோகரா முழக்கங்கள் முழங்க வெள்ளி திருத்தேரில் வள்ளி, தெய்வயாணையோடு எழுந்தருளி காட்சியளித்த சுப்பிரமணிய சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் கோயில் நகரம் - Kanchipuram Temple 

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் புகழ்பெற்ற கந்தபுராணம் அறங்கேறிய குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் வெள்ளி திருத்தேர் உற்சவமானது நடைபெறும்.

அந்த வகையில் இன்று மார்கழி மாதம் முதல் நாள் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். 

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

மேலும் உற்சவ மூர்த்தி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வள்ளி தேவானையுடன் வெள்ளை நிற பட்டுடுத்தி பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி கற்பூர தீபாராதனைகள் காட்டப்பட்டது. 

அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை‌ வணங்கி ஏராளமான பக்தர்களுடன் வெள்ளித் தேரினை கோவில் உட்பிரகாரத்தில் வடம் பிடித்து இழுத்துச் சென்று வழிபட்டனர். மேலும் அப்போது அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களும் வெள்ளித்தேரில் எழுந்தருளிய முருகப்பெருமானை பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகர் கோயில்

மூலவர் முருகப்பெருமான் ஜபமாலை, கமண்டலம் ஏந்தி படைப்புக் கோலமூர்த்தியாகக் காட்சி தருகிறார். பிரம்மனுக்குப் பிரணவத்தின் பொருள் தெரியாதபோது அவனைக் கூட்டிச் சிறையிலிட்டுப் பின்பு அவனுடைய தொழிலாகிய படைப்புத் தொழிலை தான் மேற்கொண்ட திருக்கோல காட்சி, முருகப்பெருமானை அலட்சியம் செய்த பிரம்மனிடம் தர்க்கம் (சண்டை) செய்ய, அவரிடமிருந்து உரிய பதில் வராததால் பிரம்மனை சிறைப் பிடிக்கிறார் முருகன்.

விடுவிக்க கோரி ஈசனின் கட்டளையை எடுத்துரைத்த நந்தி தேவனையும் திருப்பி அனுப்பி விடுகிறார். இறைவன் நேரில் சென்று எடுத்துரைத்து பிரம்மனை விடுவிக்க செய்கிறார். தந்தையின் கட்டளையை மீறியதற்கு பிராயச்சித்தம் வேண்டி சிவலிங்கம் அமைத்து வழிப்பட்டார். அச்சிவலிங்கமே தேவசேனாதீச்வரர் என்பது மூலத்தில் அறியப்பட்டது.

பிரளய பெருவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மார்க்கண்டேய முனிவர், திருமாலைக் கண்டு உலகத்து பொருட்களெல்லாம் எங்கே போயின என வினவ, எனது வயிற்றுக்குள் அடக்கம் என்று கூறிய திருமாலை இகழ்ந்தார் முனிவர். இதனால் மனம் வருந்திய திருமால் பிலாகாசத்து அன்னையை வழிபட்டு, பின்னர் இங்கு வந்து ஈசனருகில் சந்நிதி கொண்டார்.

காஞ்சிபுரத்தில் பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இருந்தாலும் முருகருக்கு முக்கிய கோவிலாக இந்த கோவில் உள்ளது. குறிப்பாக முருகருக்கு இருக்கக்கூடிய அறுபடை கோவில்களுக்கு அடுத்த முக்கியத்துவம், வாய்ந்த கோவிலாக காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவிலில் விளங்குகிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
IND Vs SA T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? டஃப் கொடுக்குமா தெ.ஆப்.,? இன்று 4வது டி20 போட்டி
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Mangesh Yadav: ரூபாய் 5.20 கோடி கொடுத்து மங்கேஷ் யாதவை ஆர்சிபி வாங்கியது ஏன்? இதுதான் காரணமா!
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
Prashant Veer: ரூபாய் 14.20 கோடிக்கு 2 கே கிட்சை தட்டித் தூக்கிய CSK - யார் இந்த பிரசாந்த் வீர்?
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
IPL Auction 2026 LIVE: பிரசாந்த் வீர், கார்த்திக் சர்மாவுக்கு ஜாக்பாட்! அதிக விலைக்கு ஏலம் போன கேமரூன் கீரின்..ஐபிஎல் மினி ஏலம்..
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி !! சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய கும்பல்
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
Half Yearly Exam Holidays: அரையாண்டு விடுமுறை குறித்த வதந்தி: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட பரபரப்பு தகவல்! மாணவர்கள் கவனத்திற்கு
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
ஹைதராபாத்தில் தாய் செய்த கொடூரம்! 8 வயது மகளை மாடியிலிருந்து தள்ளி கொலை - காரணம் என்ன?
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
TNPSC: புதிய அரசுப் பணியிடங்கள்; விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு- வயது, கல்வித்தகுதி!
Embed widget