Sawan Monday Fasting: இந்த ஆண்டு சாவன் மாதத்தின் முதல் திங்கட்கிழமை… சிவனை வணங்கி விரதம் இருப்பது எப்படி? கட்டுப்பாடுகள் என்ன?
சாவன் சோமவாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
சாவன் புனித மாதம் ஜூலை 4-ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் சாவன் சோம்வார் (திங்கட்கிழமை) ஜூலை 10-ஆம் தேதி வருகிறது. 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்து நாட்காட்டியின்படி, சாவன் ஆகஸ்ட் 31 வரை இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப் போகிறது. இந்த சாவன் மாதத்தில் திங்கட்கிழமைகள் சிறப்பு வாய்ந்தவை ஆகும். குறிப்பாக இந்த ஆண்டு சாவன் மாதத்தில் மொத்தம் 8 திங்கட்கிழமைகள் வருகிறது.
சிவன் பக்தர்களுக்கு முக்கியமான நாள்
சாவன் சோம்வார் சிவன் பக்தர்களுக்கு மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. சாவன் சோமவாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதன் மூலம் பக்தர்கள் செழிப்பு, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சியை பெறுவார்கள் என்பது நம்பிக்கை. சாவனின் முதல் திங்கட்கிழமை பஞ்சாங்கத்தின்படி இந்த ஆண்டு சுகர்ம யோகம், ரேவதி நட்சத்திரம், ஷ்ரவண கிருஷ்ண அஷ்டமி திதி ஆகியவை குறிக்கப்படும்.
சிவனை வணங்குதல்
பக்தர்கள் தேன், தயிர், பால், பூ, பேல் பத்திரம், நெய், சர்க்கரை ஆகியவற்றை சிவபெருமானுக்கு அளித்து வழிபடுவார்கள். இதனை செய்வது மூலம் பக்தர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற அவரது ஆசீர்வாதத்தைப் பெற முயற்சி செய்கிறார்கள். முதல் சாவன் சோமவாரத்தின்போது விரதம் இருப்பது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பொதுவான நடைமுறையாகும். இந்த நாளில், விரதம் இருப்பவர்கள், இந்த நாளில் சில கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறார்கள்.
சாவன் திங்கட்கிழமை விரதத்தில் தவிர்க்க வேண்டியவை:
- இறைச்சி, முட்டை, பூண்டு, வெங்காயம் மற்றும் பிற அசைவ உணவுகளை உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
- சாதாரண உப்பைத் தவிர்த்து, கல் உப்பைக் கொண்ட சாத்விக் உணவைத் தேர்ந்தெடுக்கவும்.
- மது மற்றும் பிற மது சார்ந்த பானங்கள் அல்லது உணவுப் பொருட்களைத் தவிர்க்கவும்
- சிவபெருமானுக்கு மஞ்சள், தேங்காய், துளசி இலைகள் போன்றவற்றை அர்ப்பணிக்க வேண்டாம், இவைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு முறை
சாவன் திங்கட்கிழமைகளில், பக்தர்கள் சிவன் மற்றும் பார்வதி தேவியிடம் ஆசி பெறுகிறார்கள். அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வணங்கினால் வேண்டிய வரம் பெறலாம், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யுங்கள். இனிப்புகள் மற்றும் பழங்களையும் வழங்கலாம். பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சிவன் கோவில்களுக்கு வந்து பல்வேறு ஸ்லோகங்களையும் மந்திரங்களையும் உச்சரித்து வருகின்றனர். சாவன் சோமவாரத்தில் விரதம் இருப்பவர்கள் பழங்கள் மற்றும் சாத்வீக உணவுகளை சாப்பிட்டு விரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம்.