மேலும் அறிய

ஐயப்பன் கோயில் நடைதிறப்பு...பல்வேறு விதிமுறைகளுடன் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து செல்லும் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதி நடை பெறுகிறது. இதற்காக கோவில் நடை வருகிற 15-ந்தேதி  நேற்று மாலை திறக்கப்பட்டது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு புதிய நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


ஐயப்பன் கோயில் நடைதிறப்பு...பல்வேறு விதிமுறைகளுடன் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலிருந்து ஐயப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள். இந்த நிலையில் கார்த்திகை 1ம் தேதி இன்று முதல் அடுத்த 41 நாட்களுக்கான அதாவது மண்டல பூஜையன்று சாமி தரிசனம் செய்ய ஐயப்ப பக்தர்கள் தங்களது விரதத்தை தொடங்கினார்கள்.


ஐயப்பன் கோயில் நடைதிறப்பு...பல்வேறு விதிமுறைகளுடன் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு இந்தாண்டு பல்வேறு விதிமுறைகளை கோவில் நிர்வாகம் செயல்முறைப்படுத்தவுள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் ஆன்லைன் முன்பதிவு மற்றும் 'ஸ்பாட் புக்கிங்' அடிப்படையில் தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.அது மட்டுமின்றி பக்தர்கள் தங்களின் இருமுடி கட்டுகளில் கற்பூரம்,சாம்பிராணி, பன்னீர் ஆகியவற்றை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சபரிமலை வரக்கூடிய பக்தர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி சாமிதரிசனம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாக மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்த பக்தர்கள், முன்பதிவு செய்த நாட்களில் சரியாக வர வேண்டும்.


ஐயப்பன் கோயில் நடைதிறப்பு...பல்வேறு விதிமுறைகளுடன் பக்தர்கள் சபரிமலைக்கு வருகை

முன்பதிவு செய்த பக்தர்கள் யாத்திரை தேதியை மாற்ற முடிவு செய்தால் தங்களின் முன்பதிவை ரத்து செய்ய வேண்டும். வாட்ஸ்-அப்பில் பெறப்பட்ட இணைப்பு அல்லது ஆன்லைன் முன்பதிவு அமைப்பு மூலம் முன்பதிவுகளை ரத்து செய்யலாம். அப்படி செய்ய வில்லை என்றால் அது போன்ற பக்தர்களால் யாத்திரை காலத்தில் மீண்டும் முன்பதிவு செய்ய முடியாது. திட்டமிட்ட தரிசனத்தை தவறவிடுபவர்களின் இடங்கள் ஸ்பாட் புக்கிங் செய்யக்கூடிய பக்தர்களுக்கு மாற்றப்படும். பம்பை, எருமேலி, வண்டிப் பெரியார்-சத்திரம் உள்ளிட்ட நுழைவு வாயில் களில் ஸ்பாட் புக்கிங்கை பயன்படுத்தும் பக்தர்கள் 12 மணி நேரத்திற்குள் தங்களது தரிசனத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஸ்பாட் புக்கிங்கில் முன்பதிவு மற்றும் நுழைவு சரிபார்ப்புக்கு 2 நிமிடங்கள் ஆகும். அப்போது கியூ-ஆர் குறியீடு ஸ்கேன் மூலம் பத்தர்களின் தகவல்கள் மற்றும் புகைப்படம் அங்கீ கரிக்கப்படும். ஆனால் அவர்களுக்கான டிக்கெட் டில் பக்தர்களின் புகைப் படம் இருக்காது.ஸ்பாட் புக்கிங்கிற்கு ஆதார் அட்டை கட்டாய மாகும். புதிய வழிகாட்டு தல்களின் படி எதிர் காலத்தில் அனைத்து மெய் நிகர் வரிசை முன்பதிவுகளும் ஆதார் அட்டையின் அடிப் படையில் மட்டும் இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
ஆன்மீக பயணத்திற்கு தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.5000 நிதியுதவி - மிஸ் பண்ணாதீங்க!
வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!
வள்ளலாரின் 204-வது அவதார ஆண்டு: சின்னக்காவனத்தில் திரண்ட பக்தர்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
ஜப்பான், தைவான் பக்தர்களை ஈர்த்த தமிழ்நாட்டு ஆன்மீகம்: சீர்காழி ஒளிலாய குருபூஜை சிறப்பம்சங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: மூலஸ்தான தரிசனத்தில் புதிய மாற்றங்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் நவராத்திரி: மூலஸ்தான தரிசனத்தில் புதிய மாற்றங்கள்!

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
Honda Elevate: புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
புது எலிவேட்டிற்கு எலிவேஷன் கொடுத்த ஹோண்டா..! கூடுதல் அம்சங்கள், சொகுசு வசதிகள் - விலை எப்படி?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
Embed widget