Sabarimala Temple Calendar 2026: சபரிமலை கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி லிஸ்ட் வெளியீடு ! ஐயப்ப பக்தர்களே முழு விபரம் இதோ!
Sabarimala Temple Opening Dates 2026: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு திறக்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு சபரிமலை நடை திறக்கும் தேதி மற்றும் நடை அடைக்கும் தேதி விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

சபரிமலையில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இன்று இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து சன்னிதானத்திற்கும் தீபம் ஏற்றியதும் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும். தொடர்ந்து 41 நாட்கள் பூஜைகள் நடைபெற உள்ளது. நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.
சபரிமலை கோயிலுக்கு தினமும் ஆன்லைன் மூலம் 70,000 பேரும் ஸ்பாட் புக்கிங் மூலம் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையுடன் நடை அடைக்கப்பட்டு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைதிறக்கப்படுகிறது
2026 ஆம் ஆண்டு சபரிமலை நடை திறக்கும் தேதி மற்றும் நடை அடைக்கும் தேதி விவரங்களை திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கும் தேதி, மூடும் தேதி விவரங்கள் | Sabarimala Ayyappa Swamy Temple Calendar
| பூஜை | திறக்கும் நாள் | அடைக்கும் நாள் |
| மகரவிளக்கு விழா | 30-12-2025 | 20-1-2026 |
| மகர விளக்கு | 14-1-2026 | - |
| மாசி பூஜை | 12-2-2026 | 17-2-2026 |
| பங்குனி பூஜை | 14-3-2026 | 19-3-2026 |
| பங்குனி உத்திர திருவிழா | 22-3-2026 | 1-4-2026 |
| பங்குனி உத்திர கொடியேற்றம் | 23-3-2026 | - |
| பங்குனி உத்திரம் ஆராட்டு | 1-4-2026 | - |
| சித்திரை பூஜை | 11-4-2026 | 18-4-2026 |
| சித்திரை விஷூ | 15-4-2026 | - |
| வைகாசி பூஜை | 14-5-2026 | 19-5-2026 |
| பிரதிஷ்டை தின விழா | 25-5-2026 | 26-5-2026 |
| ஆனி பூஜை | 14-6-2026 | 19-6-2026 |
| ஆடி பூஜை | 16-7-2026 | 21-7-2026 |
| ஆவணி பூஜை | 16-8-2026 | 21-8-2026 |
| திருவோண பூஜை | 24-8-2026 | 28-8-2026 |
| புரட்டாசி பூஜை | 16-9-2026 | 21-9-2026 |
| ஐப்பசி பூஜை | 17-10-2026 | 22-10-2026 |
| சித்திரை ஆட்ட திருநாள் | 6-11-2026 | 7-11-2026 |
| மண்டல கால பூஜை | 16-11-2026 | 27-11-2026 |
| மண்டல பூஜை | 27-12-2026 | - |
| அடுத்த மகரவிளக்கு கால பூஜை | 30-12-2026 | - |
| அடுத்த மகர விளக்கு | 14-1-2027 | - |





















